விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு

தஞ்சை, ஜன. 12- மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாகவும், மத்திய அரசிற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும்  தஞ்சை பனகல் கட்டடம் எதிரில் விவசாயிகள் காத்திருப்பு போராட் டம் கடந்த 14.12.2020 முதல் நடை பெற்றது.

அனைத்து அரசியல் அமைப்பு களின் விவசாய அணி பொறுப் பாளர்களும், போராட்ட ஒருங்கி ணைப்புக் குழுவினரும், அரசியல் சாராத விவசாய அமைப்புகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறி வுத்தலின்படி 16-12-2020 அன்று திரா விடர்  கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் மாவட்டத் தலை வர் சி.அமர்சிங், மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்த்தன், குடந்தை மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் .சுப்ரமணி யன், தஞ்சை வடக்கு ஒன்றிய செய லாளர் கா.அரங்கராசு உள்ளிட்ட  கழகப் பொறுப்பாளர்கள் போராட் டத்தில் பங்கேற்றனர்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் காத்திருப்புப் போராட் டத்தில் பங்கேற்று பேசுகையில், திராவிடர் கழக தலைமைச் செயற் குழுவில் விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை படித்துக்காட்டி கண் டன உரையாற்றினார்.

Comments