கொல்கத்தா,
ஜன.6 சுகாதார காப்பீடு அட்டையை பெற தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மம்தா பானர்ஜி தனது அடையாள அட்டைடை பெற்றுக் கொண்டார்.
மேற்கு
வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, ஸ்வஸ்த்ய சாதி என்னும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஒரு குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
கொல்கத்தா
மாநகராட்சியில், இந்த காப்பீடு திட்ட அடையாள அட்டை விநியோகம் தொடங்கி உள்ளது. இந்த அட்டையைப் பெறு வதற்காக காலிகட் பகுதியில் நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மம்தா பானர்ஜி அந்த பகுதியில் வசிப்பதால், அவரும் காப்பீடு அட்டை பெற அங்கு வந்தார். அவர் தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று அடையாள அட்டை பெற்றார். இதை முக்கிய எதிர்க்கட்சியினரான பா.ஜ.க.வினரும் பாராட்டினர். ‘இதுதான் தர்மமாகும்’ என்று மாநில பா.ஜ.க.
தலைவர் திலிப் கோஷ் கூறினார். இதேபோல
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிர்கத் ஹக்கிம், தனது வீட்டின் அருகில் உள்ள மய்யத்தில் சென்று அடையாள அட்டை பெற்றார். மற்ற அமைச்சர்களையும் இந்த திட்டத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.