ஆகா, அரிய கண்டுபிடிப்பு!
சி.பி.அய். கட்டுப்பாட்டில்
இருந்த 103 கிலோ தங்கம் மாயமானது குறித்த விசாரணையில்,
10 ஆண்டுகளுக்கு
முன்பு தங்கத்தைக் கைப்பற்றியபோது - தவறாகக் கணக்கிட்டு, கூடுதலாகப் பதிவிட்டு இருக்கலாம்: - சி.பி.அய்.
அதிகாரி வாக்குமூலம்
ஆகா,
எவ்வளவு அரிய கண்டுபிடிப்பு! இந்த அணுகுமுறையை ஒவ்வொன்றிலும் கடைப்பிடித்தால் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாகக் கிடைக்கும் - நினைத்தாலே புல்லரிக்கிறது.
ராகுலின்
பேச்சின்
தாக்கமோ!
தமிழ்
கலாச்சாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்: - தமிழக பா.ஜ.க.
பொறுப்பாளர் சி.டி.ரவி
குற்றச்சாட்டு.
பா.ஜ.க. கூறும்
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பது எல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? ராகுல்காந்தியின் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் அவர் ஆற்றிய உரையின் தாக்கமோ!
பத்தாயிரத்துக்கு
அய்ந்து?
2020 இல்
இந்தியாவில் மருத்துவப் படுக்கை வாய்ப்பு என்பது உலக வரிசையில் 155 ஆம் இடத்தில் இருக்கிறது.
புரியும்படிச்
சொன்னால் ஒவ்வொரு பத்தாயிரம் பேருக்கும் 5 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இது பவள விழா காணப் போகும் இந்திய சுதந்திரத்தின் மகத்தான சாதனையோ!
செத்த
பின்பும் சிவலோகப் பதவி?
புதுச்சேரி
காங்கிரசில் இருந்து விலகி, மேனாள் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
மனுசன்
செத்துப் போன பிறகுகூட சிவலோகப் பதவி, வைகுண்ட பதவி அடைய ஆசைப்படும்போது - உயிரோடு இருக்கும் ஜீவன்கள் பதவி பதவி என்று அலைவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
வழக்கமான
பாணியே!
சீர்காழியில்
கைதான 3 பேருக்கு கை கால்களில் முறிவு.
கழிப்பறையில்
வழுக்கி விழுந்ததாக சொல்லியிருப்பார்களே - இது வழக்கமான பாணிதானே!
இது
எந்தப் போதை?
தைப்பூசம்
விடுமுறை என்பதால் ஒரே நாளில் 292 புள்ளி 47 கோடியைத் தொட்டது மது விற்பனை.
பக்திப்
போதையின் அர்ப்பணிப்பு.