‘இதுதான் பார்ப்பனியம்' நூலிலிருந்து...

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக் குள் மெக்காலேயின் ஆங்கிலக் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. மனுதர்ம நெறிப் படி காலங் காலமாக கல்வியைத் தங்களுடைய ஏகபோகமாகவும், மற்ற வர்களுக்கு உரிமையில்லாமலும் ஆக்கி வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். தங்களை விரைவாக ஆங்கிலக் கல்விக்கு உட்படுத்தினர். அதன் விளைவாக 1875-க்குள் ஆங்கிலக் கல்வி பெற்ற பார்ப்பனர் அனைவரும் நீதித்துறை (Judiciary), வருவாய்த் துறை (Revenue) ஆகிய இரண்டு துறைகளையும் தங்கள் கைவசப்படுத்தினர். அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்த தமிழ்ப் பத்திரி கைத் துறையில் புகுந்தனர். இந்து மதம் என்ற போர்வையில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் சனாதன தர்மத்தைப் பத்திரிகையின் வாயிலாக வளர்க்கத் தொடங்கினர். அப்போது மெதுவாகக் கிளர்ந்து கொண்டிருந்த தேசிய இயக்கத்தையும் தம் வசப்படுத்தினர். தமிழ் நாவலாசிரியரானவத்தலக்குண்டு ராஜமை யர் 'Rambles of Vedanta'  என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலை எழுதியதும் இக்காலத்தில்தான். சுதேச மித்திரன் இதே காலத்தில் சனாதன தர்மத்தினைப் பாதுகாக்க மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டது. சனாதன தர்மத்தின் வெளிப்பாடான THE HINDU    என்ற பெயரே பார்ப்பனர்கள் நடத்திய ஆங் கிலப் பத்திரிகைக்கும் இடப்பட்டது.

Comments