அருண்-சாருமதி வாழ்க்கை இணையேற்பு விழா

திருப்பத்தூர், ஜன. 26- திருப்பத் தூர் மாவட்டம் சோலை யார்பேட்டை சுயமரியாதைச் சுடரொளி குட்டூர் துரை சாமியின் பெயரன், பைரவன் வட்டம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய பொறுப்பாளர் துரை- அன்பு -சாந்தி ஆகியோ ரின் மகன் . அருண்,பாரதி நகர் செல்வராஜ்--சாந்தி ஆகி யோரது மகள் சாருமதி ஆகியோருக்கு 25.1.2021 இல் சோலையார்பேட்டை ஆர்.எஸ். மகாலில் வாழ்க்கை இணையேற்பு விழா மூடச் சடங்குகள் ஏதுமின்றி சுயமரி யாதை முறைப்படி நடை பெற்றது.

பாட்டாளி மக்கள் கட் சியின் மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமை தாங் கினார். அறிவியல் விஞ்ஞானி சத்தியகுமார் வரவேற்றார். கே.கே.சி.அழகிரி, பா... மாநில துணை பொதுச் செயலாளர் ராஜா, முன்னாள் பொதுச் செயலாளர் தேவராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சி.தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.கே.சி.வீரமணி அவர்கள் மணமக்களுக்கு உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்திவைத்தார்.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.கே.சி. எழிலர சன், மாநில மாணவர் கழக துணை அமைப்பாளர் சிற்ற ரசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் ராஜதுரை, சித்து, தனிஸ்குமார், ருபிக்ஷா, சிறீநாந், திவ்யா, டிவித்கி சி.சர வணன், சாரதாவேலு, பிரகா சம், மணியம்மை, ராமமூர்த்தி, பன்னீர்செல்வம் மற்றும் அக்ரி அரவிந்த் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத்தினர் பலர் கலந்துக்கொண்டனர். நிறை வாக துரை. சிட்டிபாபு நன்றி கூறினார்.

Comments