நத்தம் சி.பி.கண்ணு, நாத்திக சாக்ரடீஸ் படத்திறப்பு தமிழர் தலைவர் காணொலி வாயிலாக இரங்கல் உரை

நத்தம், ஜன. 6- 30.12.2020 காலை 11 மணிக்கு நத்தம் பெரியார் இல்லத்தில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மாநில காப்பாளர்களில் ஒருவரான நாத்திகன் சி.பி.கண்ணு, சுயமரியாதை போராட்ட இளம் வீரர் நாத்திக சாக் ரடீஸ் இருவரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி..நெப்போலியன் தலைமை யில் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஷ்குப்தா, திருமருகல் ஒன்றிய செயலாளர் பொன்.செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சுயமரியா தைச் சுடரொளி சி.பி.கண்ணு அவர்கள் படத்தை கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்தினார். சுயமரியாதை போராட்ட இளம் வீரர் நாத்திக சாக்ரடீஸ் படத்தை புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்தினார்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் என்.கவுதமன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், வருவாய்த்துறை மாவட்டச் செயலாளர் கலிய.பெருமாள், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெ. சந்திரசேகரன் மற்றும் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்களும், இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வும் இறுதியாக தமிழர் தலைவன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக இரங் கல் உரை நிகழ்த்தினார்.

மற்றும் ஏராள மான பொதுமக்களும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Comments