தமிழகத்தில் இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை இதற்காகவே இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் சாடல்

சேலம்,ஜன.19- தமிழகத்தில் கடந்த 10 ஆண்டாக கொள்ளையடிப்ப திலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்று இடைப்பாடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணா புரம் குரும்பப்பட்டி ஊராட்சியில், திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று (18.1.2021) நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட பொறுப் பாளர் செல்வகணபதி தலைமையில் நடந்த கூட்டத்தில், திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது:

ஒருவருக்குகூட வேலை கிடைக்கவில்லை

தமிழகத்திலேயே இந்த கூட்டம் தான், நம்பர் ஒன் கூட்டமாக உள்ளது. எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், உணர்ச்சியோடும், ஆர்வத்தோடும், ஆரவாரத்தோடும் உங்களை பார்ப் பதில், மட்டற்ற மகிழ்ச்சியாக உள் ளது. அதிலும், 25 ஆயிரம் பேர் பெண்களாகவே நிறைந்திருப்பது, உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்களுக்கு பாதுகாப்பாக நீங் களும், உங்களுக்கு பாதுகாப்பாக நாங்களும் இங்கே இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து வரும் எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிய, நீங்கள் தயாராக வந்து விட்டீர்கள். உங்கள் முடிவை நிறை வேற்ற நாங்க ரெடி, நீங்க ரெடியா?. இந்த தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த எடப்பாடி பழனிசாமி, தனது தொகுதிக்கு ஏதாவது செய்தாரா?. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, பல லட்சம் கோடி முதலீடு வந்தது என்றாரே, அப்படி வந்த முதலீடு மூலம் யாருக்காவது வேலை கிடைத்ததா?. இந்த மேடை யில் நாங்கள் ஒரு பெரிய ஆவணத்தை அடுக்கி வைத்துள்ளோம். இது முதல் வரின் தொகுதியான எடப்பாடியில் மட்டும் 9,600 பேர் வேலை வாய்ப் புக்காக பதிவு செய்து, காத்திருப்ப தற்கான சான்று. இதில் ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. இதே ரீதியில் தான் 234 தொகுதியும் உள்ளது.

தேர்தல் வரை ஆட்டம் நீடிக்கும்

இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை. இதற்காகவே இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண் டும் என்கிறோம். இங்கு பொதுமக்கள் பல்வேறு குறைகளை கூறினீர்கள். இவை அனைத்தும் உள்ளாட்சி சார்ந்த பிரச்சினைகள். அண்ணா மறைந்த போது, நாவலர் தான் முதல்வர் என கலைஞர் சொன்னார். ஆனால், கலைஞரை முதல்வராக் கியவர் எம்ஜிஆர். நான் எம்ஜிஆரின் பரம ரசிகன். "கருணாநிதி" என்று அவரது பெயரை உச்சரித்தவர்களை, சட்டமன்றத்தில் எச்சரித்தவர் எம்ஜிஆர் ஆவார். தன்னை முதல்வ ராக்கிய சசிகலாவுக்கு, துரோகம் செய்தவர் பழனிசாமி. சட்டமன்ற தேர்தல் வரை இவரது ஆட்டம் நீடிக்கும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், வரும் 27ஆம் தேதி சசிகலா, சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வந்தவுடன், இவரது ஆட்டம் குளோசாகி விடும். ஜெயலலிதா படத்தை பாக்கெட்டில் வைத்து ஆட்சி செய்யும் எடப்பாடி யும், அமைச்சர்களும், அவர் எப்படி மர்மமாக இறந்தார் என்பதை ஏன் இதுவரை சொல்லவில்லை?. மரணத் திற்கு நீதி விசாரணை கேட்டு அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் என்ன ஆனது. இதைப்பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை. ஒப்பந்தம் போட்டு ஊழல் செய்வதிலேயே குறியாக உள்ளார். ‘எங்கும் ஊழல், எதிலும் ஊழல்என்பதே இந்த ஆட்சியின் நிலை. கொடிய நோயான கரோனாவில் கூட ஊழல் செய்தவர் எடப்பாடி.

அதிமுக அரசை நிராகரிக்க தயாராக வந்துள்ளீர்கள்!

இந்த கொள்ளை ஆட்சிக்கு முடிவு கட்ட எங்களை விட, மக்களா கிய நீங்கள் இங்கு தயாராக வந்துள் ளீர்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன். கலைஞரின் மகனான உங்கள் ஸ்டாலின் இருக்கிறேன். எனது தந்தை 5 முறை தமிழக முதல் வராக இருந்து, தமிழக மக்களின் வாழ்வை உயர்த்தியவர். அவரது வழியில், நிச்சயம் திமுக ஆட்சி அமையும். அதிமுக அரசை நிராகரிப் போம். திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம். இவ்வாறு தி.மு.. தலைவர் தளபதி ஸ்டாலின் பேசி னார். முன்னதாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தூள் செட்டி ஏரியில், திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட் டத்தில் தளபதி மு..ஸ்டாலின் பேசி னார்.

துரோகத்தை பற்றி யார் பேசுவது  என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தன்னை முதல்வராக் கிய சசிகலாவுக்கு, துரோகம் செய்தவர் பழனிசாமி. அவர் எப்படி முதல்வர் ஆனார் என்று நான் சொல்ல தேவையில்லை. அதற்கான  பதிவை இங்கு நீங்கள் திரையில் பாருங்கள் என்றார் ஸ்டாலின். இதையடுத்து அரங்கில் அமைக்கப்பட்டிருந்த திரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பார்த்த கூட்டத்தில் இருந்த பெண்கள், "ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர்" என குரல் எழுப்பினர். இதையடுத்து மீண்டும் அதே காணொலி ஒளி பரப்பப்பட்டது.

Comments