பெரியார் நினைவு நாள் பேச்சுப்போட்டி - பங்கேற்றவர்களுக்கு பாராட்டுகள்

சென்னை, ஜன. 11- அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாளை முன் னிட்டு, தி.மு.. நண்பர்கள் குழுவினரால் நடத்தப்படும் Zero Hour Tamil வலைக்காட்சியில் மழைலையர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 25, 2020 அன்று "மழலையர் பார்வையில் பெரியார்" என்கிற இணையவழி பேச்சுப் போட்டி நிகழ்வில் ஏழு வயதிலி ருந்து பதினைந்து வயதிற்குட்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு, தந்தை பெரியார் குறித்தும் அவர் தம் தொண்டு குறித்தும் உரை நிகழ்த்தினர்.

போட்டி அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கும் குறைவான அவகாசத்தில் பெருமளவிலான எண்ணிக்கையில் கலந்துகொண்டு, ஆழமாகவும் திறம்படவும் பேசிய மழலையர்களை பாராட்டும் வகை யில் பங்குபெற்ற அனைவருக்கும் ரூ.250 பரிசும், பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.

மேலும் ஏழு வயதிலிருந்து பத்து வயது வரையிலான குழந்தை கள் ஒரு பிரிவாகவும், பத்து வயதிலிருந்து பதினைந்து வயது வரையிலான குழந்தைகள் ஒரு பிரிவா கவும் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று சிறப்பு பேச்சுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையே ரூ.1000, ரூ.750, ரூ.500 என்கிற அளவில் பரிசுகள் வழங்கப் பட்டன. மருத்துவர் எழிலன் நாக நாதன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தோழர் கனிமொழி மற்றும் தோழர் செல்வா அவர்கள் நிகழ்வை ஒருங் கிணைத்து நடத்தினார்கள்.

ஜனவரி 5, 2020 அன்று வெளியிடப்பட்ட போட்டியின் முடிவுக ளில் 7 முதல் 10 வயது வரையிலா னோர் பிரிவில் சாய் பிரதிக்யா, காரைக்குடி முதல் பரிசையும். அர் ஷியா பிலால், பெங்களூர், இரண் டாம் பரிசையும். அமிர்த வர்ஷினி, பழனி, மூன்றாம் பரிசையும் வென் றனர்.

அதேபோல் 11 முதல் 15 வயது வரையிலானோர் பிரிவில் பிர ஷிகா, நாமக்கல், முதல் பரிசையும். இஷா, எண்ணூர், இரண்டாம் பரிசையும். சவுமியா, காரைக்குடி, மூன்றாம் பரிசையும் வென்றனர்.

Zero Hour Tamil  வலைக்காட்சி யில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியை பார்த்து, சிறப்பாக பேசிய முதல் மூன்று மழலைகளுக்கான பரிசை வழங்க கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு. பையா கிருஷ்ணன் முன்வந்து வழங் கினார். அமெரிக்காவில் வசிக்கும் திரு. வசந்த் ரூ.7500, பழனிவேல் மாணிக்கம் ரூ.1000, உதயமாறன் ரூ.1000 வழங்கி ஊக்கப்படுத் தினர்.

பெருமளவு பெண் குழந்தைகள் பங்கேற்று வென்றது நிகழ்வில் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்த ZeroHour Tamil வலைக்காட்சி தோழர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Comments