வந்தேறிகளால் வாழ்நாள் எல்லாம்
அறியாமை
இருட்டில் ஆழ்த்திய தமிழர்க்கு
அறிவொளி
கூட்டிய அன்புடை பெரியார்
சீர்திருத்
தத்தால் செம்மை நெறியினை
ஆர்வத்
தோடும் மக்கள் அணைக்கையில்
சாதி
என்னும் சழக்கு தகர்ந்தது;
சமயம்
என்னும் தடைச்சுவர் இடிந்தது;
மதத்தின்
நரித்தனம் மடிந்தொழிந்தது.
இவற்றைத்
தாங்கிய என்றும் இலாத
கடவுள்
என்னும் கயமையும் மறைந்தது.
அறியாமைக்
கெலாம் அரணாய் இருந்த
வெறித்தனம்
மிகுந்த சாதியும் சமயமும்
மதமும்
கடவுளும் மண்ணில் உண்டாக்கிக்
கதைகளை
வளர்த்தவர் - உழைக்கா துண்ணும்
சோற்றால்
அடித்த சோம்பேறிகள் எலாம்,
ஆட்டம்
கண்டனர் அறிஞர் பெயரால்.
உண்மை ஒளியினை மக்களுக் கூட்டிய
பெரியார்
தம்மை ஏசினர் பேசினர்.
குட்டி
நாய்கள் போல் குரைத்துப் பார்த்தனர்;
மோழை
நரிகள் போல் ஊளை இட்டனர்.
நெருப்பின்
முன்னர்ப் பருத்திப் பொதியா?
வெள்ளத்தின்
முன் உப்பு மூட்டையா?
ஊற்றை
மண்ணால் அடைக்க முடியுமா?
புல்லேந்து
கையால் வில்லேந்துவதாய்ச்
சொல்லேந்திப்
பார்த்துச் சோர்வடைந்தனர்
விபீடண
மரபில் பிறந்த ஒருவனைக்
கேடய
மாக்கிக் கீழ் அறுப்பவர்கள்
ஒருமுறை
பெரியார் திருமுன் சென்றனர்.
உழைக்கா
துண்டு பிழைக்கும் வாழ்வினில்
மண்ணைப்
போட்டதால், மக்கள் கண்ணைத்
திறந்ததால்,
தீண்டாமைத்தீ அவித்ததால்,
சுரண்டலை,
திருட்டு வழிகளை அடைத்ததால்,
தாக்கு
தாக்கெனத் தாக்கிப் பேசினர்.
பூசனை
மொழியால் ஏசிச் சலித்தனர்;
இன்னாச்
சொற்களை இன்புடன் கேட்டுப்
புன்னகை
பூத்தார் நன்னலப் பெரியார்.
"ஏசுகின்ற
என்னுடைய நண்பர்காள்
கூசுகின்ற
மொழி கொஞ்சம் இருப்பின்
அதனையும்
நீர் அர்ச்சனை செய்க;
எதற்கு
நிற்கிறீர் எதிரில் வந்தமருக
என்ன
குறையின்னு எடுத்துச் சொல்லுக"
என்று
கேட்டதும், நின்றவர் வேர்த்தனர்.
பக்கத்
தழைத்தே உட்கார வைத்தார்.
யாரையாவது
காணச் சென்றால்
ஆர்வத்துடன்
நீர் அங்கையில் என்ன
எடுத்துச்
செல்வீர், இயம்புவீர்'' என்றார்.
"குழந்தைகள்
இருத்தால் பழங்களுடனும்
நண்பர்கள்
என்றால் தின்பண்டங்களுடனும்
மாண்பினர்
என்றால் மாலையுடனும்
"காணச்
செல்வோம்" என்று கூறினர்.
காணச்
சென்றவர் ஏற்க மறுத்தால்
மாண்புப்
பரிசினை என்ன செய் வீர்கள்?"
என்று
கேட்டார், ஈடிலாப் பெரியார்.
திரும்ப
எடுத்து வீடு திரும்புவோம்
இழப்பிலா
நாள் என எண்ணி மகிழ்வோம்.
அதுபோலத்தான்
அய்யா, உங்கள்
ஏச்சையும்
பேச்சையும் ஏற்கவில்லைதான்,
பரிசுப்
பொருள்களைத் திருப்பக் கொண்டே
இழப்பிலா
மகிழ்வில் எடுத்துச் சொல்லுவீர்"
என்று
பெரியார் இயம்பினார்; ஏசினோர்
எரிமலை
வீழ்ந்த சருகாயினரே.
-ஒரு
தாயின் உள்ளம்,
புரட்சிக்கவிஞர்
கவிதைகள்