விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு மோடியுடன் பேசுங்கள்

 பிரிட்டன் பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

லண்டன், ஜன 11 டில்லியின் எல்லையில் போராடிக் கொண்டி ருக்கும் விவசாயிகள் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்திடுமாறும், அங்கே போராடும் விவசாயிகள் மீது கொடூரமான ஒடுக்குமுறை மேற்கொள் ளப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்திடுமாறும் கோரி, நூற் றுக்கும் மேற்பட்ட பிரிட் டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான் சனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அய்ந்தாம் தேதியிட்டு எழுதப் பட்டுள்ள அந்தக் கடிதத்தில், அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகள் மீது நரேந்திர மோடி அரசு, குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதையும், கொடூரமான முறையில் அடக்கு முறையை ஏவியதையும் குறிப் பிட்டுள்ளனர்.

போரிஸ் ஜான்சன், குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வர இருந்தார். ஆனால், தன்நாட்டில் கோவிட்-19 நெருக்கடி மீண் டும் அதிகரித்துள்ளதால் அவர் தன் பயணத்தைரத்து செய்துவிட்டார். எனினும், இரு பிரதமர்களும் விரை வில் சந்தித்துப்பேச இருப்பதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப் பினர்கள் தெரிவித்தார்கள். 

அவர்கள் பிரதமருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், போராடும் இந்திய விவசாயிகளின் பிரச்சி னையின் அவசர முக்கியத்துவத்தைக் கணக்கில்எடுத்துக்கொண்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தாங்கள் வலி யுறுத்த வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளனர்.

பிரிட்டன் நாடாளு மன் றத்தின்ஹவுஸ் ஆப் காமன்ஸ்உறுப்பினர் களுடன், பிரபுக்கள் சபை (ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்)யின் உறுப்பினர்கள் சிலரும் கடிதத்தில் கையெழுத் திட்டுள்ளனர்.

Comments