பொய்களின்
உச்சியில்
'புனித' முத்துகள்
புராணங்கள்
மடியினில்
பார்ப்பனீயப்
பதுக்கல்!
கடவுளின்
பெயரால்
பிள(வு)க்கும்
வெடி
மருந்துகள்
இதிகாசங்கள்
பெயரால்
பிணம்
தின்னும்
பருந்துகள்
பக்தியின்
பெயரால்
பகற்
கொள்ளைப்
பட்டியல்
அம்பலப்படுத்தினால்
அடேயப்பா
எத்தனைக்
கூச்சல்!
உண்மையை
உரைத்தால்
ஊடகங்களின்
குரைப்பு!
குரைப்பவர்கள்
குரைக்கட்டும்
கூக்குரலும்
போடட்டும்!
உண்மை
கசக்கும்
தான்
ஒப்பனைகள்
மினுக்கும்
தான்
'போடா
போ!
உன்னையும்
தெரியும்
- உன்
ஒப்பனையும்
தெரியும்'
“பனங்காட்டு
நரி
சலசலப்புக்கு
அஞ்சாது!
வஞ்சகப்
பூனைகளின்
'கீச்'
சுக்கு
சிங்கங்களும்
ஓடாது'
வெடித்தது
- ஓர்
எரிமலை
ஈரோட்டின்
அருளால்
தின்று
கொழுத்த
ஆரியம்
திராவிடக்
குரலால்
அலறுது
அலறுது!
தெரிந்தது
தெரிந்தது
ஆரிய
உயிரின்
பதுங்கு
குழி
அடையாளம்
தெரிந்தது
தெரிந்தது
“வெல்லும்
திராவிட”
வாளினைத்
தூக்குக!
கொல்லும்
இடத்தின்
குறியினைத்
தாக்குக!
ஆளையல்ல
- அதன்
'ஆலகால'
நஞ்சை
புத்துணர்ச்சியாம்
பொங்கலே
வா!
புரட்சி
சங்கநாதம்
பொழிக!
பொழிக!!
ஆரியப்
பழமை
விறகுகள்
எரிக!
ஈரோட்டுப்
பொங்கல்
ஏரோட்டும்
மக்களின்
எழுச்சிப்
பொங்கல்
பொங்கலோ
பொங்கல்!
- கவிஞர்
கலி.பூங்குன்றன்