செய்தியும், சிந்தனையும்....!

கெட்டவுட்டோ!

ரேசன் கடைகளில் உணவு வழங்கும் தொகுப்புப் பைகளில் முதல்வர், முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெறலாம். பேனர், கட்-அவுட் வைக்கத் தடை: - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

, ‘கட்-அவுட்டு'களுக்குக்கெட் அவுட்டோ!'

கைமேல் பலனோ!

தமிழக மீனவர்கள் மூவரைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மூன்று நாட்கள் இலங்கைக்குச் சென்று வந்ததன் உபயமோ, சபாஷ்! கைமேல் பலன்!

தலைக்கொரு சீயக்காயா?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் தலைமையிடம் மும்பையில் உள்ளதால், பணித் தேர்வு மும்பையில் நடப்பது சரியானதே: - எல்.முருகன், மாநில பா... தலைவர்

அய்..எஸ். தேர்வின் தலைமையகம் டில்லியில் இருப்பதால், தேர்வுகள் டில்லியிலா நடக்கிறது?

கூறுவது  இந்து' ராம்!

‘‘அதிகாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்துத்துவாவை எதிர்த்துப் போராட வேண்டும்!''

நினைவிருக்கட்டும் இப்படி கூறியிருப்பது ‘‘இந்து'' ராம்!

தேவையில்லை என்பார்களோ!

முதுநிலை சட்டப் படிப்புக்கு இனி அகில இந்திய தேர்வு.

போகிற போக்கைப் பார்த்தால் மாநிலத்திற்கென்று ஏன் தனி ஆட்சி? மத்திய ஆட்சி பார்த்துக் கொள்ளும் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ!

ஒரே நாடு, ஒரே மொழி என்பதுதானே சங் பரிவார் நிலைப்பாடு?

காந்தியார் வாய்க்கு

 சர்க்கரை!

கோவிலுக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்முறையை நடத்திய இரு வாலிபர்கள் நாகையில் கைது!

கோவில்கள் விபச்சார விடுதிகள்' என்று காந்தியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

, அந்த மலை முழுங்கி மகாதேவனா?

தமிழகக் கோவில்களை பக்தர்களே நிர்வகிக்க வேண்டும்: - ஜக்கி வாசுதேவ்

இப்படிக் கூறுவது- கோவையில் மலைப்பகுதிகளை ஆக்கிரமித்து ஆசிரமம் நடத்தும் மலை முழுங்கி மகாதேவன் என்பது நினைவிருக்கட்டும்!

தண்டனை

ஒரு வழிப்பாதை!

உத்தரப்பிரதேசத்தில் டால்பினைக் கொன்ற 3 பேர் கைது!

டால்பினைக் கொன்றால்தான் குற்றம் - பெண்களை சீரழிப்பது, சிறுபான்மையினரைத், தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவது எல்லாம் குற்றமல்ல!

.பி. பா... ஆட்சியில்!

Comments