மக்களைப் பற்றி முதல்வர் பழனிசாமி சிந்திக்கவில்லை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை,ஜன.16- திருவள் ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோணாம்பேடு கிரா மத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொய்க்கால் குதிரை ஆட் டம், சிலம்பாட்டம், கிராமிய இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டா லின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொங்கல் வைத்து கொண்டாடினார்.

விழாவில் தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது:

`தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதுபோல விரைவில் வழி பிறக்கும். இந்த மேடையின் வலது பக்கத்தில் கோயில் உள்ளது. நம்மை ஏதோ கோயிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். `கோயில்கள் கூடாது என்ப தல்ல; கோயில்கள் கொடிய வர்களின் கூடாரமாகிவிடக் கூடாதுஎன்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் `பராசக்திபட வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் புரிந்துகொள்ளாமல் பாஜக. ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலர், திட்டமிட்டு திமுக ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. தற்போதைய அதிமுக ஆட்சி கொடுமையானது. முதல்வர் பழனிசாமியை மக்கள் தேர்ந் தெடுக்கவில்லை‌. அதனால் அவர் மக்களைப் பற்றி சிந் திக்கவில்லை. நான் திடீரென அரசியல் வாரிசாக வந்துவிட் டதைப் போல அவர் பேசு கிறார். எனக்கு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றுப் பின்னணி உள்ளது.

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியால் வேலைவாய்ப்பு இல்லை; பெண்களின் முன் னேற்றம் பாழ்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயங்களைத் தரக்கூடிய வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திமுக கடுமை யாக எதிர்க் கிறது. அதிமுக அரசோ, வேளாண் சட்டங் களை ஆத ரிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments