வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

புதுடில்லி, ஜன.30  மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் நேற்று (29.1.2021)  முழக்கங்களை எழுப்பினர்.

மக்களவையில் இரங்கல்

பட்ஜெட் கூட்டத் தொட ருக்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது. மக்களவை கூட்டம் தொடங் கியதும், சமீபத்தில் மறைந்தமத்திய அமைச்சர்கள் ராம் விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி மற்றும் ஜஸ்வந்த் சிங், தருண்கோகாய், மோதிலால் வோரா, அகமது படேல், எச். வசந்தகுமார் உள்ளிட் டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட் டது.

எதிர்க்கட்சிகள் முழக்கம்

அப்போது காங்கிரஸ், தி.மு.. மற்றும் இடதுசாரி கட்சிகளின்  மக்களவை உறுப்பினர்கள் முழக் கங்களை எழுப்பியவாறு சபையின் மையப்பகுதிக்கு வந்தனர். சிவசேனா மக்களவை உறுப் பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்தவாறு முழக்கங்களை எழுப் பினர்.

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள், இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிக ளுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சபையில் சபாநாய கர் இருக்கை அருகே சென்று தனது கட்சியினர் முழக்கங்களை முழங்கியபோது, காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சபையில் இருந்தார். முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப் பினர்களை அவர்களது இருக் கைகளுக்கு செல்லுமாறும், தனி மனித இடைவெளியை பின்பற் றுதல் உள்ளிட்ட கரோனா வழி காட்டும் நெறிமுறைகளை பின் பற்றுமாறும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

நேற்றைய கூட்டத்தின் தொடக் கத்தில் பீகார் மாநிலத்தில், வால் மீகி நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அய்க்கிய ஜனதா தளம் உறுப்பினர் சுனில் குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

Comments