சொக்கநாதபுரம் சின்னத்தம்பி சிலை திறப்பு

சொக்கநாதபுரம், ஜன. 9- பட்டுக்கோட்டை கழகம் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சி.செகநாதன் அவர்களின் தந்தை சொக்க நாதபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவரும் தொ.வே. கூட்டுறவு வங்கி இயக்குனருமான சின்னத்தம்பி அவர் களின் நூற்றாண்டை ஒட்டி சீரிய பகுத் தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி சின்னத்தம்பி அவர்களின் மார்பு அளவு சிலை அவர்களது சொக்கநாதபுரம் இல்லத் தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி தலைமையில் பட்டுக் கோட்டை மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களால் 27.12.2020 அன்று நண்பகல் 12 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மேனாள் மாவட்ட . செயலாளர் பேராசிரியர் முனைவர் கரு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பா ளர் சோம.நீலகண்டன், கழக பொதுக் குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், சேது ஒன்றிய மேனாள் கழக செயலாளர் வீ.ஆத்மநாதன், பேராவூரணி ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் சக்திவேல், செயலாளர் செ.கவுதமன், பெரியார் பெருந்தொண்டர் .சண்முகவேல், கழக மாணவர் கழக பொறுப்பாளர் சசிகுமார், வளப்பிரமன் காடு புருஷோத் தமன், பேராவூரணி நகர கழக செயலா ளர் சி.சந்திரமோகன் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் நலச்சங்க செயலாளர் ஆதிதிராவிடர் உறவின் முறைத்தலைவர் பூவாளூர் பொன்னுசாமி மற்றும் ஏராள மானோர் கலந்து கொண்டனர். நூற் றாண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியவர்கள் சேது ஒன்றிய கழகத் தலைவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான சி.செகநாதன், தலைமை யாசிரியை அன்பரசி செகநாதன், நீதித் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஜீவானந்தம், மருத்துவர் சி.அன்பழகன், சி.சந்திரலேகா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments