உளுந்தூர்ப்பேட்டை, ஜன. 26- பள்ளி ஆசிரியரை பொது இடத்தில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த நபர் களை மீது நடவடிக்கை எடுக் கக்கோரி காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் வசித்து வருபவர் வேல்முரு கன். இவர் நெடுமானூர் அர சுப் பள்ளியில்
ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர். இந்நிலையில் மாட் டுப் பொங்கலன்று இவர் வீட்டிற்கு முன்பாக மண் கொட்டி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உடனடியாக அகற்று மாறு கூறியிருக்கிறார்கள்.
இதில்
ஆசிரியருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிலருக் கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆசிரியரை தாக்கிய தாக கூறப்படுகிறது. பின்பு ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல் ஊர் பஞ்சாயத்து போன்று தெருவில் கூடி நின்று ஆசிரியரை வலுக்கட் டாயமாக வீட்டிலிருந்து அழைத்து வந்து ஊர் பெரிய வர்களின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதில்
மனம் உடைந்த ஆசிரியர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துள்ளார். இதனால் பெரும் மன உளைச் சலுக்கு
ஆளான ஆசிரியர் வேல்முருகனின் மனைவி சசிகலா தன் கணவரை பள்ளி ஆசிரியர் என்றும் பாராமல் பொது இடங்களில் தாக்கி காலில் விழ வைத்த மன்னிப்பு கேட்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த
சம்பவத்தில் சம்பந் தப்பட்டவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க வும் அவர் கோரிக்கை விடுத் துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாதி மத பேத மற்ற
வகுப்பறையில் மாணவர் களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளி ஆசிரியரை அடித்து பொது இடத்தில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.