மருத்துவக் கல்லூரியில் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, ஜன.6- மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இடைக் கால உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு களில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அரசுப் பள்ளி மாண வர்களை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (5.1.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மாணவர்கள் தரப் பில் ஆஜரான வழக்குரைஞர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார்.

அட்வகேட் ஜெனரல்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாரா யண், “மருத்துவப் படிப்புக்கான மாண வர்கள் சேர்க்கை முடிந்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. அந்த இடங்களிலும், 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அவற்றுக் கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய 2 வார அவகாசம் வேண்டும்என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பொதுநலனை கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இடைக்கால உத்தரவு எதையும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். பின்னர், விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Comments