திராவிடம் ஒப்பும் திருநாள்

.கண்ணன்

திருநாள், பண்டிகை, கொண் டாட்டம், உற்சவம், விரதம், விழா என்பன; ஏதேனும் ஓர் அடிப்படையிலே நடைபெறும் நிகழ்ச்சி யாகும். ஒரு கொள்கை, குறிக்கோள், நோக் கம் இல்லாத விழாக்கள், எப்போதும், எந்நாட்டிலும் நிகழ்வதில்லை. பல மான அடிப்படை, எதுவுமில்லாத னவும்களிப்பு’’, “பொழுதுபோக்கு’’ என்ற வகை யிற் சார்வனவாகும்.

விழா கொண்டாட்டம் என்பதை, ஒரு வகைப் பிரச்சாரம் என்றுகூடச் சொல்ல லாம். கலையிலே, காவியத் தலே, பிரச்சாரம் கூடாது என்று கதறும்புண்ணியாத்மாக்கள்’’ மிகுந் துள்ள நம் நாட்டுத் திருவிழாக்களிலே பெரும்பான்மையானவை பிரச்சாரமயமே. அவற்றிற் சில:

தீபாவளிப் பண்டிகை: நரகாசுரன் என்னும்அந்நாள் ஆரியப் பகை வனை ஆரியப் பாதுகாப்புக்காக, கிருஷ்ண பரமாத்மா, மனைவி மூலம் கொன்றதன் நினைவுக் கொண்டாட்-டம். “ஆரியரை எதிர்ப்போர் அழிக் கப்படுவர்’’ என்ற பயமுறுத்தல் பிரச் சாரம் இது.

சூரசங்காரத் திருவிழா: தேவர்கள் என்பவர் தங்கள் இன வாழ்வுக்காக, அசுரர் கள் எனப்பட்ட இனத் தலை வன் சூரபது மனை, முருகன் என்கிற இனத் துரோகியைக் கொண்டு கொலை செய்வித்து, பரிசாக தேவர் தலைவன் மகள் தெய்வயானையைக் கொடுத்து, முருகனை, தேவ சேனாதி பதி யாக்கியதன் ஞாபகார்த்தக் கொண்டாட்டம். “ஆரிய விரோதிகளைக்  கொலை செய் வோருக்குப் பெண்ணும், பெருமையும் தரப்படும்’’ என்கிற மறைமுகப் பிரச்சாரம் இது.

வைகுண்ட ஏகாதசி: வைதிக சம்பி ரதாயப்படி, விரதமிருந்து பார்ப்பன ரைப் பணிந்து, தானம் கொடுத்து, கோயிலில் தட்சணை கொடுத்து, அபிஷேக ஆராத னைகள் நடத்தினால், எவ்வளவு பாவம் செய்திருந் தாலும் வைகுண்ட பதவி கிட்டும், என்கிற புரோகிதத் தொழில் வசீகரப் பிரச்சாரம் இது.

நவராத்திரி விழா: சுகேது என்னும் மன்னன் பகைவனால் நாட்டை இழந்து, அரசி துவேதியையுடன் காட்டுக்குச். சென்று, ஆங்கீரச முனிவரின் ஆசியும், ஆலோசனையும் பெற்று, அரசி நவராத்திரி விரதம் இருந்ததன் பயனாக இழந்த நாட் டைப் பெற்றார்களாம். ஆகவே, மன்னனே யானாலும் முனிவர்கள், ரிஷிகள் அவர்கள் பரம்பரையினரான புரோகிதப் பார்ப்பனர் சொற்படி நடந்தால்தான் சுகம் கிட்டும் என்கிற பிரச்சாரம் இது.

இவை போன்ற பலப்பல கற்பனை களை, நடப்புகளை, கருத்து களைப் பரப்பும் திருநாள் - பண்டிகை, விழா என்பவை, திராவிட நாட்டில் விளைத்துள்ள தீமை களை எண்ணிப் பார்க்கும்போது, நெஞ்சம் புண்ணாகின்றது. திராவிடனுக்கு இழிவு கொடுத்து, அறிவையும், ஆற்றலையும் குலைத்து, அவனைப் பழையசூத்திரத் தன்மை’’யிலேயே வைக்கும் தெய்விகத் திருவிழாக்களை, பண்டிகைகளை, ஒழிக் கும் நாளே திராவிடன் மனிதன் தன்மை பெறும் நாளாகும்.

தீமைகளை ஒழிக்கும் நேரத்தில், நன் மைகளை ஆக்கவும் வேண்டும். “காப்பி குடிக்காதே’’ என்று சொல் வது ஒழிப்பு வேலை. அதே நேரத்தில்ராகிமால்ட் குடி’’ என்பது ஆக்க வேலையாகும். விழா வேண்டும், விழாவின் பெயரால் விபரீத விளை வுகள் வேண்டாம்.

காலத்திற்கும், கருத்துக்கும் ஒவ் வாத _ கேடு தரும் விழாக்களை ஒழித்து விட்டு, நல்விளைவும், நற்கருத்தும், அறிவோடு கூடிய ஆனந்தமும் நல்கும் விழாக்களைக் கொண்டாட வேண்டும். பிரச்சாரம் என்று நம்மீது பழி போடும்பிரகஸ்பதி’’களைப் பற்றிப் பொதுமக்கள் அறியச் செய்ய வேண்டும். அறிந்தும் வருகின்றனர்.

பொங்கல் திருநாள்: திராவிடர் திருநாள்! உழைப்பவன் பயன்கா ணும், உவப்பு நாள். உண்டு கொழுப்பவரின் புராணக் கற் பனையல்ல. காடு கழனிகளிலே, நெற்றி வியர்வை நிலம் சிந்தப் பாடுபட்ட உழவன் பலனை அறுவடை செய்து, ராசி கண்டு, மகிழ்வுகொண்டு மனம் பொங்கும் நினை வுக்கான மகத்தான நாள். இதனை ஆந்திர மும், கன்னட மும் கொண்டாடுகின்றது. திராவி டம் முழுமையும் ஒப்பும் திருநாள் இது. எவரையும் இழிவு படுத்துவ தில்லை. இனவேற்றுமையைக் கிளப்புவதில்லை.

சங்கராந்தி’’ப் பண்டிகை என்று வட மொழிப் பெயரும், உருவமும் கற்பித்துப் படம் போட்டுப் பொங் கல் புதுநாளையும் ஆரியம் பயன் படுத்திக் கொண்டு வந்தது - வரு கின்றது என்பது உண்மைதான். எனி னும் பகுத்தறிவுச் சுடரொளியால் இருள் தேய்கின்றது. மான உணர்ச்சி ஓங்குகின்றது. பொங்கல் திருநாள் தமிழனின் - திரா விடனின் தனிப் பெரும் நாளாக வலுப் பெறு கின்றது. முத்தமிழ் விழாவாகவும், கலை விழா வாகவும் மலருகின்றது. உண்மை வெல்க! மடைமையும், சோர்வும் அகன்று, வாய்மையும், வளமும் பொங்குமாக!


Comments