தமிழர் தலைவர் பிறந்த நாள், நூல் வெளியீட்டு விழா அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு

ஆத்தூர், ஜன. 16- தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 88ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆத்தூர் மாவட்டக்கழகம் சார்பில் ஆத் தூர் நகரில் 2.12.2020 அன்று  எழுச்சியு டன் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் .வானவில் தலை மையில் மண்டல செயலாளர்  இரா.விடுதலைசந்திரன், நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை, நகர செயலாளர் திவாகர், மாநில இளைஞரணி துணை செயலாளர் .சுரேஷ், பகுத்தறிவு ஆசிரி யர் அணி பொறுப்பாளர் வா.தமிழ்பிர பாகரன்,  மாவட்ட அமைப்பாளர் கோபி இமயவரம்பன் ஆகியோர் முன்னிலை யில்  மாவட்ட செயலாளர் நீ.சேகர் வர வேற்றார்.

கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். 

நகர திமுக செயலாளர் கே. பாலசுப் பிரமணியம் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தநாரி நூல்க ளைப் பெற்றுக்கொண்டு உரையாற் றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக மாவட்ட செயலாளர் கோபால் ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொருளாளர் .சு.மணி, விடுதலை சிறுத் தைகள் கட்சி ராஜீவ்காந்தி, சிபிஅய் வட்டச்செயலாளர்  முருகேசன், சிபிஎம்  நகர செயலாளர் இராமகிருஷ்ணன்,  மனித உரிமைகள் கழகம் ராமு, ஆத் தூர் பெரியார் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் .முருகானந்தம், மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல்வம், வாழப்பாடி நகர தலைவர் கூத்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன் மற்றும்  திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நூல்க ளைப் பெற்றுக்கொண்டார்கள். விழா முடிவில் மண்டல இளைஞரணி செய லாளர் கூ.செல்வம்  நன்றி கூறினார்.

Comments