பஞ்சாப் விவசாயிகள் போராடுவது ஏன்?

2012-17 ஆம் ஆண்டுகளில் பஞ்சாபை ஆண்ட சிரோமணி அகாலிதளம் - பா... கூட்டணி அரசின் உத்தரவுப்படி, பஞ்சாப் பல்கலைக் கழகம், பஞ்சாப் விவசாயப் பல்கலைக் கழகம், குருநானக் பல்கலைக் கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வின்படி, 2000-2015 வரையிலான 15 ஆண்டுகளில் பஞ்சாபில் மட்டும் 16,606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக் கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்களில்,

44% பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஹெக்டேருக்கும் (2.4 ஏக்கர்) குறைவான நிலம் உள்ள குறு விவசாயிகள்.

30% பேர் 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள சிறு விவசாயிகள்.

18% பேர் 2.5 ஹெக்டேர் வரை நிலமுள்ள அரை - நடுத்தர விவசாயிகள்.

7% பேர் 4 ஹெக்டேர் வரை நிலம் உள்ள நடுத்தர விவசாயிகள்.

1% பேர் 4 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள பணக்கார விவசாயிகள்.

ஆளுநர் கிரண்பேடி சொல்லாமல் சொல்லுவது?

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி, அம்மாநிலத்தில் ஆட்சியில் காங்கிரஸ் இருப்பதால், எல்லா வகைகளிலும் முட்டுக்கட்டை போடுவதற்காகவே மத்திய பா... ஆட்சியால் அனுப்பப்பட்டவர்.

இப்பொழுது ஒரு திட்டத்தைக் கொடுத்துள்ளார்! குலத்தொழிலில் ஈடுபடுவோருக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

செருப்பு தைப்பவர்களுக்கு நவீனபூத்துகளை' ஏற்பாடு செய்து பரம்பரைப் பரம்பரையாக இந்தத் தொழிலையே செய்துகொண்டு இரு - படித்துவிடாதே - பட்டதாரி ஆகிவிடாதே - பதவிகளில் அமர்ந்துவிடாதே என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறாரோ!

பா... ஆட்சியில் ஆளுநர்கள்கூட பார்ப்பனத்தனத்துடன் பரபரக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

எங்களை தாக்கியது விவசாயிகள் அல்ல!

டில்லி காவல்துறை

புதுடில்லி, ஜன. 30 ‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை' என்று டில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி காவலர்கள் தெரிவித்துள்ளனர்

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஜனவரி 26 அன்று மாபெரும் டிராக்டர் பேரணி டில்லியில் நடைபெற்றது. திட்டமிடப்பட்டவாறு அனுமதி வழங்கப்பட்ட வழிகளில் பெரும்பாலான விவசாயிகள் பேரணி நடத்திய நிலையில், சில பிரிவினர் மட்டும் அனுமதியில்லாமல் செங்கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது செங்கோட்டையில் கலவரமும் வெடித்தது.

கலவரத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அடைக்கலம் அடைந்தனர். நானும் என்னை தற்காத்துக் கொள்ள முயன்றேன். நான் கிரில் கேட்டை தாண்ட முயன்ற போது, அது சரிந்து என் மீது விழுந்தது. என்னை காப்பாற்றுமாறு கதறியபோதும் காவலர்கள் அவர்களை தற்காத்து கொள்ளவே முயன்றனர். பத்து நிமிடங்களுக்குப் பிறகே என்னை காவலர்கள் சிலர் மீட்டனர்'' என தெரிவித்துள்ளார் டில்லி பெண் காவலரான ரேகா குமாரி.

கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்தக் கலவரத்தில் காயம்பட்டுள்ளனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 25 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 பேர் கைதாகி உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் மீது

தேசத்துரோக குற்றச்சாட்டாம்!

புதுடில்லி, ஜன.30 விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ், மிரினால் பாண்டே மற்றும் வேறுசிலரின் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சபார் அகா மற்றும் கேரவன் ஊடகத்தின் ஆசிரியர் ஆனந்த் நாத் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 35 வயதான ஆர்பித் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை சம்பவம் நடைபெற்ற டில்லிக்கு பதிலாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதியப்பட்டுள்ளது. அதேசமயம், நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் வழக்குப் பதிவுசெய்து, பின்னர் அதை சம்பந்தப்பட்ட காவல்துறை மண்டலத்திற்கு மாற்ற முடியும் என்ற நுட்பத்தை .பி. மாநில காவல்துறை கையாண்டுள்ளதாகவும் சில சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அறியக்கூடிய குற்றங்கள் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கான புகாரை அளித்த ஆர்பித் மிஸ்ரா கூறியுள்ளதாவது:

எனது புகாரின் காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை'' என்றுள்ளார் அவர்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முதலில் அவர்கள்மீது வன்முறையாளர்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்துவது, அவர்களது ஆதரவாளர்கள்மீது தேசத் துரோகிகள் என்று வழக்கு சுமத்தி அச்சுறுத்துவது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை தடைசெய்வது என பல முனைகளில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது இதில் முதல்கட்டமாக முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

 

Comments