வேளாண் துறை பயன்பாட்டிற்கான புத்தாக்க தொழில்நுட்ப வாகனங்கள்

சென்னை, ஜன. 8- கரோனா பெருந் தொற்றால், இதற்குமுன் கண்டிராத அளவு சவால்களைக் கடந்த 2020ஆம் ஆண்டு சந்தித்தாலும், வேளாண் தொழில்துறைக்கான டிராக்டர் களை தயாரித்து வழங்கி வரும் நிறுவனமான சோனாலிகா டிசம்பர் 2020இல் இந் நிறுவனம் இதுவரையில்லாத அதிக பட்ச விற்பனையான 11,540 என்ற இலக் கைத் தொட்டு, தனது சந்தை பங்களிப் பையும் 16.1 சதவீதம் என்ற உச்சநிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

கடந்த ஆண்டு முழுக்கவே, பன்னாட்டு சந்தையில் அதிநவீன மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட டிராக் டர்களை சோனாலிகா தொடர்ந்து அறிமுகம் செய்ததன்மூலம் இந்தத் துறை நிறுவனங்களின் சராசரி வளர்ச் சியான 12சதவீதம் என்பதைப் போல, சுமார் 3 மடங்கு, அதாவது 33சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை அளவு விற்பனையை எட்டியது குறித்து பேசிய சோனாலிகா குழும செயல் இயக்குனர் ரமன் மிட்டல், “கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து கண்ட விற்பனையை, இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களி லேயே எட்ட முடிந்துள்ளது. அதாவது, ஒரு முழு ஆண்டில் நாங்கள் விற்பனை செய்த அளவான 1 லட்சம் டிராக்டர் என்ற அளவை, இந்த ஆண்டு முதல் 9 மாதங்களிலேயே எட்டி யுள் ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments