இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம்.. நான் அதன் ஊழியன் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்

சென்னை,ஜன.5- இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம் என்றும்நான் அதன் ஊழியன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், 50வது தலைமை நீதி பதியாக சஞ்சீப் பானர்ஜிநேற்று (4.1.2021) காலை 11.30 மணிக்கு பொறுப் பேற்றார்அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்றார்பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன்வழக்குரைஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன்மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் .ஆர்.எல்.சுந்தரேசன்பெண் வழக்குரைஞர்கள் சங்க தலைவி லூயிசாள்லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோரும் பேசினர்.

இதையடுத்து தலைமை நீதிபதிஏற்புரையாற்றி பேசியதாவது:

உலகின் மிக பழைமையான மொழி தமிழ்தமிழக கலாச்சாரம்பண்பாடுகலைகள் என்னை வியக்கவைத்துள்ளதுசென்னை உயர் நீதிமன்றம் மிக பழைமை யான நீதிமன்றம்இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்எனது பணிக்கு வழக்குரைஞர்களான உங்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்சிலர் மட்டுமே வழக்குரைஞர் தொழிலில் சிறந்து விளங்க  வேண்டும் என நினைக்கிறார்கள்பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் சேவை முக்கியத்துவம் பெற வேண்டும்இப்போது நான் எனது மற் றொரு வீட்டுக்கு வந்துள்ளேன்இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்வேன்அரசியலமைப்பை உறுதி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்இன்றிலிருந்து தமிழ்நாடு எனது மாநிலம்இந்த மாநிலத் தின் ஊழியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

Comments