ஏழை எளிய பின் தங்கிய மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

காட்டுப்பள்ளி, ஜன. 10- திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி துறைமுக பகுதிக்குட்பட்ட வயலூர், திருவெள்ளவாயல், நெய்த வாயல் பஞ்சாயத்துகளை சேர்ந்த ஏழை எளிய பின் தங்கிய பள்ளி மாணவ, மாண விகள் மிகவும் சிரமான சூழ் நிலையில், தினமும் 7 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இதனால், படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் பள்ளி இடைநிற்றல் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் 119 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

திருவெள்ளைவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் முன்னிலை வகித்து பேசினார். வாயலூர் பஞ்சாயத்து தலைவர் வி.ஜி.கோபி தலைமை தாங்கி பேசினார்.  கவுன்சிலர் மகாலட்சுமிபிரகாஷ், திருவெள்ளைவாயல் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் துலுக்கானம், உள்பட பலர் கலந்துகொண்டனர்.                       

சென்னை மாநகராட்சி பள்ளி

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

சென்னை, ஜன. 10- எழும்பூர் தொகுதிக்குட்பட்ட,  109வது வட்டம் சுப்பராயன் பகுதியில் அமைந்துள்ள  பெருநகர சென்னை மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரவிச்சந்திரன்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதி வண்டியை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  தனது சொந்த நிதியிலிருந்து எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரவிச்சந்திரன் பரிசு தொகை வழங்கி, பாராட்டினார்.

Comments