செய்தியும், சிந்தனையும்....!

ஆனந்த விகடன்' பார்வையில் பெரியார்!

ஒரு அமைச்சர் சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொன்னதெல்லாம் ஒரு பேசு பொருளாக மாறுவதென்பது

வடக்கேயெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைதானே! தமிழகம் பெரியார் மண்

என்பதற்கு இதுவும் ஒரு காரணம்: - 'ஆனந்தவிகடன்', 6.1.2021, பக்கம் 67).

பெரியார் மண்ணா என்று ஏகடியம் பேசும் கோணல் புத்திக்காரர்களின் வாயைக் கோணி ஊசி கொண்டு தைத்துவிட்டது ஆனந்தவிகடன்.

முருகன்கள் தெரிந்துகொள்ளட்டும்!

திருச்செந்தூருக்குப் பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் இருவர் லாரி மோதி மரணம்.

முருகன்களுக்கு என்ன சக்தி என்பதை முருகன்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இதைச் சொல்லுவதற்கா?

இலங்கைக் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள்: - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இதைச் சொல்லுவதற்காக ஒரு மத்திய அமைச்சர் மூன்று நாள் பயணம்?

உடனடியாக விடுதலை செய்வதில் என்ன கவுரவக் குறைச்சலாம்?

சம்பளம்' என்ற சொல் வந்தது எப்படி?

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான்சம்பளம்' என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்திலும் (Salary) என்ற சொல் (Salt) என்பதன் அடியாகப் பிறந்தது: - ஆய்வாளர் தொ.பரமசிவன் நூல்: ‘‘அறியப்படாத தமிழகம்'', பக்கம் 26).

இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்த தொ..அவர்கள், பெரியாரியலாளர் என்பது பெருமைக்குரியதுதானே.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றலாம்

இந்த நாட்டிலே?

இந்தியாவில் 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 0.7 புள்ளி விழுக்காடாக வீழ்ச்சி அடையும்: - மத்திய அரசு அறிவிப்பு.

சரிவு, வீழ்ச்சி, மதம், கார்ப்பரேட் இவற்றின் பெருக்கல் தொகைதானே இன்றைய மத்திய பா... ஆட்சி? மன் கீ பாத்தால் மக்களைத் திசை திருப்பலாம் என்பது எத்தனை நாளைக்கு?

தோல்வியிலிருந்து மீளாத டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் புகுந்து வன்முறை வெறியாட்டம்.

இன்னும் ஆட்சி நிர்வாகம் டிரம்பின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கறுப்பின மக்கள் இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் டிரம்ப் நிருவாகம் என்ன செய்திருக்கும் என்று செய்தியாளர் ஜோ எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது.

கடவுளை மற -

மனிதனை நினை!

அனைத்துக் கோவில் பணியாளர்களுக்கும் கருணைக் கொடையாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்: - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஏன் கருணையே உருவான கடவுளின் (?)கடாட்சம் அவர்களுக்குக் கிட்டவில்லையோ!

‘‘கடவுளை மற - மனிதனை நினை!''     - தந்தை பெரியார்

Comments