டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
· இந்தியா குடியரசுத் தினம் கொண்டாட உள்ள சனவரி 26ஆம் நாளில் மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர்
ஆகார் படேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
· அமெரிக்க அரசமைப்புச் சட்ட விதி 25அய் பயன்படுத்தி தற்போதைய அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என துணை அதிபருக்கு
ஜனநாயகக் கட்சி மீண்டும் வற்புறுத்தியுள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· மோடி அரசின் பிடிவாதக் குணத்தால், விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட உள்ளது என மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
· வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடும் நிலையில் உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இது குறித்து தொலைபேசி மூலம் பேசியுள்ளார். தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இடதுசாரி கட்சித் தலைவர்களைச் சந்தித்து விவாதித்துள்ளார்.
தி
டெலிகிராப்:
· அய்.அய்.டி, அய்.அய்.எம். போன்ற முதன்மையான தொழில் நுட்பக் கல்லூரிகளில் இனி 60 சதவீதத்திற்கு மேல் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என மத்திய கல்வித்
துறையின் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக் காரணமாக, கல்வியின் தரம் மேலும் வீழ்ச்சியடையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
பி.பி.சி. நியூஸ்
தமிழ்:
இந்திய
அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும்வரை அதை மத்திய நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் அதை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா
உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான
அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது.
- குடந்தை
கருணா
12.1.2021