படகு மூழ்கடிப்பு இரக்கமின்றி இலங்கைக் கடற்படையினர் செய்து காட்டினர்

விடுதலையான மீனவர் தகவல்

 ராமேசுவரம், ஜன.22 ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை யால் கைது செய்யப்பட்ட வர், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஜெனோ பர்.

இவர் கடந்த 35 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் தவித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு விடுதலையாகி ராமேசுவரம் வந்த அவர் கூறியதாவது:

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது

4 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் நான் உள்ளிட்ட மீனவர்கள் இருந்த படகை பறிமுதல் செய்தனர். அப்போது எங்களை கைது செய்து அழைத்துச் சென்ற அவர்கள், முட்டி போட வைத்து கிரிக்கெட் ஸ்டம்ப் மற்றும் இரும்பு குழாயால் கொடூரமாக தாக்கினார்கள். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமிலேயே எங்களை தங்க வைத்திருந்த னர். அங்கு எங்களை ஆடைகளை அவிழ்க்க செய்து, ஆட வைத்து செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். ஊர்க்கா வல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற போது, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழக மீனவர்கள் அனைவ ரையும்கைவிலங்குடன், இரும்புசங்கிலிகளால்கட்டிசாலையில் அடிமை போல் நடக்கச்செய்து அழைத்துச்சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு நீதிபதி, இலங்கை கடல் பகுதிக்குள் இனிமீன்பிடிக்க வந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை எனவும், படகு திரும்ப வழங்கப்படாது எனவும் கடுமையாக எச்சரித்தார்.

இனிதமிழக படகுகள் மீது கப்பலை வைத்து மோதி மூழ்கடிக்க செய்து விடுவோம் என இலங்கை கடற்படையினர் அப்போது எச்சரித்தனர். அவர்கள் சொன்னதை போன்று ஈவு, இரக்கமற்ற முறையில் இந்த கொடூர சம்பவத்தையும் அரங்கேற்றிவிட்டனர். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

Comments