பெரியாரை அழைத்து மாநாடு நடத்திய மாணவர் தொ.பரமசிவன்

1970களில் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் படித்த காலத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக மாநாட்டை நடத்திய மாணவர்களுள் ஒருவர் தொ.பரமசிவன் அவர்கள். அம்மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களை அழைக்கப் பட்டிருந்தார். நிகழ்ச்சியை நடத்துவதற்கு வசூலுக்குச் சென்ற போது, அனுபவமின்மை யால் மாணவர் களுக்குப் போதுமான நிதி கிட்டவில்லை. பின்னர் எம் தந்தையார் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் வழிகாட்ட லில் நகரின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து நிதி வசூலித்துத் தரும் பொறுப்பை ஏற்று, நிகழ்ச்சி சிறக்க உதவினோம்.

காரைக்குடி காந்தி திடலில் நடந்த அந் நிகழ்ச்சியை நடத்தியவர்களுள் பலர் பின்னாளில் தமிழகத்தின் முக்கிய இடங்களைப் பெற்றனர். மேனாள் அமைச்சர்கள் சேடப்பட்டி முத்தையா, அழகு திருநாவுக்கரசு, மு.தென்னவன் ஆகியோ ரும், தொ.பரமசிவன், மேற்பனைக்காடு சொர்ண சேகர் போன்றோரும் அதில் அடங்குவர். வெகு காலத்திற்குப் பிறகு 2018-ஆம் ஆண்டு தொ.. அவர்களுடன் தொலைப்பேசியில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பல செய்திகளை அவர்தான் நினைவுகூர்ந்தார்.

- சாமி.சமதர்மம், காரைக்குடி

Comments