இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

இராமேஸ்வரம், ஜன.11- எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி, இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற் படையினர் சிறை பிடித்தனர். வானில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி மற்ற வர்களை விரட்டியடித்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கட லுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். படகுகளில் இருந்த வலைகளை பறித்து வெட்டி கடலில் வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.

தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர் கிருபை என்பவரின் விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் வளன்கவுசிக், நிஜான், பிரைட்டன், மாரி, கிஷோர் உட்பட 9 பேரையும் சிறைபிடித்தனர். அவர்களை இரவோடு இரவாக காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு மீனவர்கள்

9 பேரிடமும் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அட்டூழியத்தால் அச்சமடைந்த இராமேஸ்வரம் மீனவர்கள், மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பினர். இதனால் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

Comments