தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்தநாள் விழா - நூல்கள் அறிமுக விழா

குடந்தை, ஜன. 12- குடந்தை கழக மாவட்டம் சார்பில் 3.1.2021 ஞாயிற் றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 88ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நூல்கள் அறிமுக விழா கழக காப்பா ளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ராஜகிரி கோ.தங்கராசு தலைமையில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர்உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக காப்பாளர் நெய்வேலி வெ.ஜெய ராமன், தஞ்சை மண்டல செயலாளர் .குருசாமி, தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங்,பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தி.ராஜப்பா,மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், குடந்தை பெரு நகர தலைவர் கவுதமன், பொதுக்குழு உறுப்பினர்/மாவட்ட இளைஞரணி தலைவர் .சிவக்குமார், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் சா. அஜிதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோக நாதன், தஞ்சை வடக்கு மாவட்ட சிபிஅய் செயலாளர் மு..பாரதி, தஞ்சை மாவட்ட சிபிஅய்எம் செயற் குழு உறுப்பினர் சின்னை.பாண்டி யன், திருச்சி, தஞ்சை மண்டல விசிக செயலாளர் சா.விவேகானந்தன், இந்திய யூனியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் .எம்.ஷாஜகான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் இரா.முருகன், நீல புலிகள் கட்சி தலைவர் .இளங்கோவன் ஆகி யோர் கலந்துகொண்டு 'ஒப்பற்ற தலைமை', தமிழர் தலைவர் ஆசிரியர் 88ஆவது பிறந்த நாள் மலர், 'வாழ் வியல் சிந்தனைகள்', 'பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்', 'மயக்க பிஸ் கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை', பேராசி ரியர் அருணன் எழுதிய 'மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்' ஆகிய நூல்களை வெளியிட்டு  சிறப்பித்தனர்.

திருவிடைமருதூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கோவி செழியன் கலந்துகொண்டு நூல்கள் ஆய்வுரை மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் வாழ்த்துரையாற்றினார். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்னும் தேவைப்படுகிறது; அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு தேவை; அதற்காக அவர் நலமுடன் வாழவேண்டும் என்று உரையாற் றினார்.

தஞ்சை வடக்கு மாவட்ட காங் கிரஸ் தலைவர் "அரசியலில் இருக்கக் கூடிய எங்களுக்கெல்லாம் பல்வேறு வகைகளில் அரசியல்ரீதியான பதவி களும் வருமானங்களும் கிடைக்கிறது. எவ்வித அரசியல் ரீதியான பதவிகளை யும் வருமானங்களையும் எதிர்பார்க் காமல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்கள் சமூக பணியாற் றுவது பெருமைக்குரியது" என்றும், தஞ்சை வடக்கு மாவட்ட சிபிஐ செயலாளர் மு..பாரதி "நான் வேறு கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்தாலும் ஆசிரியர் ஆலோசனை களை கேட்பவன், அவர்கள் எழுதக் கூடிய புத்தகங்களை படிப்பவன் என்றும், பல ஆண்டுகள் ஆசிரியர் நல்ல  உடல் நலத்துடன் வாழ்ந்திட வேண்டும்" என்று வாழ்த்தினர்.

விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் 'சமூக நீதிக்காக சமரசம் இல்லாமல் போரா டக் கூடிய ஒரே தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மட்டுமே' என்று  பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் .எம் ஷாஜகான் "சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பதோடு மட்டு மல்லாமல் அவர்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது தமிழர் தலைவர் ஆசிரியர் மட்டுமே" என்று பேசினார். தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் இரா.முருகன் "இன்றைய காலகட்டத்திலே தந்தை பெரியாரின் சிலைகளை அவ மதிப்பது உடைப்பது போன்ற செயல் களில் ஈடுபடும் காவிகளின் கொட் டத்தை அடக்குவது மதிமுகவின் முதல் பணி" என்றும், நீலப்புலிகள் கட்சியின் தலைவர் இளங்கோவன் "டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்" என்றும், "இன்றைய கால கட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமைக் குரலாக இருப்பவர் ஆசிரியர் மட்டுமே" என்று பேசினார். திருச்சி தஞ்சை மண்டல விசிக செய லாளர் விவேகானந்தன் "'மயக்க பிஸ் கெட்டு'கள் ஒரு எச்சரிக்கை" என்கிற புத்தக வெளியீட்டை விளக்கிப் பேசி "இன்றைக்கு ஆர்எஸ்எஸ் சங்க்பரி வார் அமைப்புகளுக்கு சிம்ம சொப் பனமாக இருக்கக்கூடியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா மட்டுமே" என்று பேசினார். தஞ்சை மாவட்ட சிபிஅய்எம் செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் "குடந்தை பகு தியில் மதவாத சக்திகளுக்கு எதிராக திராவிடர் கழகத் தோழர்களோடு ஆசிரியர் அய்யா வழியில் இணைந்து போராடுவோம்" என்றார்.

இறுதியாக வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய ஆய்வுரை மற்றும் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துரையாற்றிய திருவிடைமரு தூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள், "தந்தை பெரியார் இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்டவர் கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகியிருக்க முடியாது. அதே போன்று எங்களைப் போன்றவர்கள், இங்கு விழாவில் கலந்து கொண்டவர்கள் யாருமே படித்திருக்க முடியாது  என்றும் கலைஞர் அவர்கள் பதினாறு வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தவர் என்று மேடைதோறும் திமுகவைச் சார்ந்த நாங்கள் முழங்கினாலும் பத்து வயதிலேயே கடலூர் வீரமணி என்கிற சிறுவனாக மேடையேறி தந்தை பெரியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் முழங்கியதோடு மட் டுமல்லாமல் மேடைதோறும் மத வாத சக்திகளுக்கு எதிராக ஆதாரத் தோடு புத்தகங்களோடு புத்தகத்தின் பெயர், பதிப்பகத்தின் பெயர், உரிமை யாளர் பெயர்  எழுதியவர் பெயர் உட் பட பக்கம் உட்பட பக்கத்தில் பாரா உட்பட பாராவில் எத்தனையாவது வரி என்பது உட்பட ஆதாரத்துடன் பேசக்கூடிய எனக்கு தெரிந்த வரை யில் ஒரே  தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மட்டுமே என்றும், இன்றள வும் திராவிட இயக்கங்களை பெரியார் வழியில் திராவிடம் வெல்லும் என்கிற முழக்கத்தோடு முன்னெடுக்கின்ற ஒரே தலைவர் ஆசிரியர் மட்டுமே அதனால் தான்  திமுக 39 நாடாளு மன்ற உறுப்பினர்களும் பதவியேற்பில் பாராளுமன்றத்தில்பெரியார் வாழ்கஎன்று முழங்கினார். இனி தமிழ் நாட்டில் பெரியார் பெயரை சொல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது அந்த நிலைக்கு ஆசிரியர் உழைப்பு தான் காரணம் என்றும், திராவிடர் கழகம் குறித்து பேராசிரியர் அருணன் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பொதுவுடைமை கொள் கைகளும் திராவிட இயக்க கொள்கை களும் ஒரு தண்டவாளத்தை போன் றது சமத்துவத்தை மட்டுமே நோக்கி செல்லக்கூடியது என்று பறைசாற்றி யுள்ளதாக பேசினார். ஆசிரியர் 88ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்ந்து சொல்லி ஆசிரியர் எழுதிய புத்தகங்களை பற்றி ஆய்வுரை செய்து பேசுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும் என்றும் பேசினார்.

விழாவில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை மாவட்ட கழக செயலாளர் உள்ளிக்கடை சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியினை மாவட்ட கழகத் தலைவர் கு.நிம்மதி ஒருங்கிணைத்தார். பெருநகர திரா விடர் கழகச் செயலாளர் பீ.இரமேஷ் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் 30 புத்தகத் தொகுப் புகள் விற்பனை செய்யப்பட்டன. வருகை தந்த அனைவருக்கும் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை புத்த கம் வழங்கப்பட்டது.

 

Comments