தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,ஜன.8- தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று (7.1.2021) மட்டும் 64,364 சோத னைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் 8,23,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 911 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,04,239 பேர் குணமடைந்துள்ளனர். 7,547 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 12 பேர் இறந்தனர்.

 

மனிதன்மீது இல்லாத அக்கறை மாட்டின் மீதா?

புதுடில்லி, ஜன 8 பசு மாடுகள் குறித்து மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 25ஆம் தேதி இணையம் மூலம் தேர்வு நடத்தப்பட இருப்பதாக  ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான இணைய வழி தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளார்.

மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, “பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டைபேணிகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு சார்பில்,   பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே நாட்டு பசுக்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகள்,  குறித்து புரிந்துகொள்ளும் வகையில் இந்த தேர்வை நடத்துவதாக தெரிவித்து உள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும்,  மக்களிடைய பசுக்கள் குறித்த  புரிதல் ஏற்படுவதை நோக்கமாக கொண்டே  இந்த தேர்வு முதல் முறையாக நடத்தப்படுகிறது. அதன்படி  அடுத்த மாதம் (பிப்ரவரி)  25ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்வை  பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என யார் வேண்டும் என்றாலும்  கட்டணமின்றி எழுதலாம் என்றும், சிறந்த முறையில் பதில் அளிப்பவர் களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை தொடர்ந்து மக்கள் விரோத சட்டம் கொண்டுவந்து அழித்துக் கொண்டே மாடுகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேர்வு நடத்து கிறார்கள், அதுவும்  இணையத்தில்.

Comments