அரியலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மு.மருதமுத்து மனோன்மணி அவர்களின் 80 வது அகவை நிறைவு முத்து விழா

 

அரியலூர், ஜன. 5- அரியலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மு.மருதமுத்து மனோன்மணி அவர்களின் 80ஆவது அகவை நிறைவு முத்து விழா 27.12.2020 அன்று அரியலூரில் ஆசிரியர் சித்ரா நீலமேகம் வரவேற்புரை ஆற்ற மறு மலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சின்னப்பா தலைமையில் திராவிடர் கழக மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந்தராசன், மண்டல செயலாளர் மணிவண்ணன், பெங்களூரு பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் இராசாராம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகி யோரின் முன்னிலையில் திராவிடர் கழக கழக பேச்சாளர் புலவர் நாத்திக நம்பி வாழ்த்துரை வழங் கினார்.

செந்துறை ஒன்றிய தலைவர் சங்கர், செந்துறை ஒன்றிய செயலாளர் முத் தமிழ்ச்செல்வன், வஞ்சினபுரம் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் தன பால், தமிழ்களம் புலவர் அரங்கநாடன், இளவரசன், ஆசிரியர் ராஜேந்திரன், கருப்புசாமி, ரகுபதி, அப்துல் மஜீத் மற்றும் குடும்ப நண்பர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வழக்குரைஞர் பகுத்தறி வாளன் இணைப்புரை வழங்கிட இராவ ணன், பூபாலன் ஆகியோரால் கவிதை வாசிக்க வழக்குரைஞர் உஷா அன்பரசன் நன்றி கூறினார். திராவிடர் கழகத்தின் சார்பாக அய்யா அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக கலந்துகொண்ட அனை வருக்கும் விழா நாயகன் மருதமுத்து எழுதிய திருமண மந்திரம் தேவையா? என்கின்ற புத்தகமும், ’மயக்க பிஸ்கெட்டு' கள் - ஓர் எச்சரிக்கை!’ என்கிற புத்தகமும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

 

Comments