சம வாய்ப்பை உருவாக்கவே 7.5 சதவீத ஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை, ஜன. 28- தமிழகத் தில் மருத்துவப் படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாண வர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத் தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (27.1.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் மனோகரன் ஆஜராகி, தமிழக தலைமை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மருத்துவ தேர்வு குழு ஆகி யோர் சார்பில் சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணனின் பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கும்வகையில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்விற்கு பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விதிமீறல் இல்லாத போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடி யாது. இட ஒதுக்கீடு கொடுத் தாலும், நீட் தேர்வில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்க ளுக்குத்தான் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. 7.5 சதவீதம் என்பது உள் ஒதுக்கீடாக மட்டுமே வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் தவறான குற்றச்சாட்டுகளை மனுவில் முன்வைத்திருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டி ருந்தது. அப்போது, இந்த பதில் மனுவிற்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்டதால் வழக்கை 4 வாரத்திற்கு நீதி பதிகள் தள்ளிவைத்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.

Comments