70 வயது மூதாட்டிக்கு புத்தாக்கமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை

மலர் மருத்துவமனை சாதனை

 சென்னை, ஜன. 22-- 70 வயதுள்ள ஒரு மூதாட்டியின் முழங்கையில் ஏற்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பல எலும்பு முறிவுகளுக்காக புத்தாக்கமான ஒரு அறுவைச் சிகிச்சையை சென்னை போர் டிஸ் மலர் மருத்துவமனை யைச் சேர்ந்த மருத்துவர்கள்  குழு வெற்றிகரமாக செய்துள் ளது.

கோவிட்-19 உட்பட பல்வேறு இணை-நோய்களின் பாதிப்புக்கு உட்பட்ட  மூதாட்டி கீழே விழுந்ததனால்  முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையின் எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்தவர் நந்தகுமார் சுந்தரம் கூறுகையில்: அந்த மூதாட்டி, கடும் காய்ச்சல் மற் றும் சுவாசிக்க மிக சிரமமான நிலையில்  அவசரசிகிச்சை பிரி வுக்கு அழைத்துவரப்பட் டார். இயல்பான சுவாச நிலையை எட்டிய பின்னர் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படடது என்றார்.

சிக்கலான அறுவைசிகிச்சையை மேற்கொள்ள போதுமான சக்தியும், திறனும் இருக்க வேண்டும் என்பதற் காக மூன்று வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.  அவரது முழங்கை  எலும்பா னது, எலும்புப்புரை பாதிப் பால் எளிதில் நொறுங்கக்கூடி யதாக இருந்தது. அதன் கார ணமாக, மேலும் ஏதும் எலும்பு முறிவுகளை உருவாக் காதவாறு ஒரு தகட்டைக் கொண்டு இரு புறங்களிலும் மிகக் கவனமாக பொருத்தப் பட்டது என்றும் அவர் கூறினார்.

Comments