தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள் : ஆண்களை விட பெண்கள் அதிகம்

18 வயது நிரம்பிய 9 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு

சென்னை,ஜன.21- தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (20.1.2021) வெளியிடப்பட்டது. அதன்படி மாநி லம் முழுவதும் வாக்காளர்களின் எண் ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. 18 வயது நிறைவடைந்த 9 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி,  மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 1.1.2021ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வட் டாட்சியர் அலுவலகம், மண்டல அலு வலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்கள் 4 நாள் நடத்தப்பட்டது.

2020 நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21.39 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 5.09 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.32 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.84 லட்சம் பேர் என மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த வர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதி யானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று (20.1.2021) காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக் கிறதா என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடந்த நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக் காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது.

தமிழகத்தில் நேற்று வெளியான வாக்காளர் பட்டியலின்படி, சென்னை  மாவட்டத்தில் 40,57,360 வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் இதுதான் ஒரு மாவட்டத்தில் அதிகபட்ச வாக் காளர்களை கொண்டுள்ள மாவட்ட மாக சென்னை மாறி உள்ளது. குறைந்த பட்ச வாக்காளர்கள் கொண்ட மாவட் டமாக நீலகிரி உள்ளது. அந்த மாவட் டத்தில் உள்ள  வாக்காளர்களின் எண் ணிக்கை 5,85,049.

Comments