அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை, 5 பேர் உயிரிழப்பு எதிரொலி அதிபர் டிரம்ப்பின் அமைச்சரவையே அவரை பதவி விலகக்கோருகிறது

வாஷிங்டன்,ஜன.9- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற் றியை உறுதிசெய்து, சான்று அளிப்ப தற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 6ஆம் தேதியன்று நடைபெற்றது.

அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதர வாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர். துப் பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந் தது. வன்முறையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது காய மடைந்த காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவரும் உயிரிழந்தார். அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் களால் நடத்தப்பட்ட வன்முறை அத்துமீறல்களுக்கு எதிராக பன்னாட் டளவில் கண்டனங்கள் குவிந்தன.

டிரம்பின் அமைச்சரவையே எதிர்ப்பு

 டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற் பட்ட வன்முறைகளுக்கு எதிராக அவருடைய அமைச்சரவையில் பங் கேற்றவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அரங்கேறிய வன்முறைகளுக்கு அதிருப்தி தெரிவித்து, டிரம்ப் அமைச் சரவையில் போக்குவரத்து அமைச் சராக இருந்த எலைன் சாவ் பதவி விலகினார். தான் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பெட்சி டிவோஸ் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்த பதவி விலகல்கள் அமெரிக்க அரசியல் அரங்கை பரபரக்க வைத்துள்ளன. இன்னும் 11 நாட்கள் மட்டுமே டிரம்ப் பதவி வகிக்க முடியும் என்ற நிலையில், நாடாளுமன்ற வன்முறைக்கு தூண்டி விட்ட காரணத்தால் அவரை பத வியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுத்து வருகிறது.

பிரதிநிதிகள் சபையின் தலைவரும், ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நான்சி பெலோசி, செனட் சபையின் ஜன நாயக கட்சி தலைவர் சக் சூமர், துணை அதிபர்  மைக் பென்சு மற்றும் டிரம்பின் அமைச்சரவை சார்பிலும் டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், அதி பரின் ஆபத்தான மற்றும் தேசத் துரோக செயல்கள், அவரை உடனடி யாக பதவியை விட்டு அகற்றுவ தற்கான தேவையை ஏற்படுத்தி உள் ளன என கூறி உள்ளனர். இதற்கு குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஆதரவாக உள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் 25ஆவது சட்ட திருத்தத்தை பயன் படுத்தி, டிரம்ப் பதவி நீக்கம் செய் யப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

Comments