புனே, ஜன.22- கரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவ னத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத் தில் 5 ஆய்வாளர்கள் உயிரி ழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து இதுவரை எந்த ஒரு விளக்க அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்து குறித்து சில சர்ச்சைக்குரிய தகவலைத் தெரிவித்த சீரம் ஆய்வாளர் கள் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு
யுனிவர் சிட்டியின் அஸ்ராஜெனெகா கரோனா தடுப்பு மருந்து, மகாராட்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறு வனம், கோவிஷீல்டு என்ற
பெயரில் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி, 16ஆம் தேதி முதல் இந்தியா
முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு போடப் பட்டு வருகிறது.
இது
தொடர்பாக “தி டெலிகிராப்' என்ற
ஊடகம் கடந்த 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய மருந்து ஆய்வு அறிவியலாளர்கள் 3ஆவது சோதனை தரவுகளை வெளியிடவேண் டும் அந்த சோதனை முடிவு களை ஆய்வு செய்த பிறகே மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கூறியிருந் தனர்.
இந்த
நிலையில், புனேவில்
உள்ள சீரம்
நிறுவனத்தில் திடீரென
பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சீரம் நிறுவனத் தின் முதல் முனையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக
முதல்கட்ட தகவல்கள் வெளி யாகி உள்ளன. சம்பவ
இடத் திற்கு விரைந்து
வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ
விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவ லும் வெளியாகவில்லை.
சீரம்
நிறுவனத்தில் கோடிக் கணக்கான டோஸ் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப் பட்டு இந்தியா உள்பட வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்ய தயாராக இருந்தது. இந்த நிலையில் இந்த தீ விபத்து பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது. இதில் 5 பேர் உயிரிழந் துள்ளனர். இந்த அய்ந்து பேர் குறித்த விவரங்களும் இது வரை வெளியிடப்படவில்லை.