அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் : துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

வாஷிங்டன், ஜன.8- அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்வருகிற 20ஆம் தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளதுஅதில் முறைப்படி அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பைடன் பொறுப் பேற்க உள்ளார்.

ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான் றிதழை வழங்கும் பணிகளை நாடாளு மன்றம் மேற்கொண்டது. இந்நிலையில், பைடன் அதிபராக தேர்வு செய்யப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ஆம் தேதி நாடாளுமன்றம் அமைந் துள்ள கேபிடால் கட்டிடத் தின் முன் டிரம்பின் ஆதர வாளர்கள் ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்து முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத் திய காவல்துறையினர் கலைந்து போகும்படி கூறினர்.  தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர காவல்துறையினர் ஈடுபட்டனர்.  கட்டுக் கடாமல் திரளானோர் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.  இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர் களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள்மீது காவல்துறையினர் துப் பாக்கி சூடு நடத்தினர்.  இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  இந்த சம் பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காய மடைந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் பணியில் பிரையன் சிக்நிக் என்ற காவலரும் ஈடுபட்டார்.  அவர் போராட்டக்காரர்களை கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபொழுது, பலத்த காயமடைந்தார்.

இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், அதில் பல னின்றி உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர்.

Comments