டில்லி விவசாயிகள் போராட்டம் - 4 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு இல்லாவிட்டால் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கும்

 விவசாயிகள் எச்சரிக்கை!

புதுடில்லி, ஜன 2 மத்திய அரசுடன் வருகிற 4 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படா விட்டால் போராட்டம் தீவிரப் படுத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலை நகரின் அனைத்து சாலைகளிலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டில் லியில் 35 நாள்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக் கிறது.

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசா யிகளோடு தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில விவசாயி களும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முடி வுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில்  முடிவடைந்துள்ளது. மின்சாரம் மற்றும் கழிவு எரிப் பதற்கான அபராத்தை குறைப்போம் என்று கூறியுள்ளது.

ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட் டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்  கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4- ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக விவசாயிகள் எச் சரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகள் சிங்கு எல்லையில் செய் தியாளர்களிடம் கூறியதாவது:-

‘‘வேளாண் சட்டங்கள் தொடர் பாக நாங்கள் எழுப்பிய பிரச்சினை களில் வெறும் 5 சதவீதம் அளவுக்கே இதுவரை அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைகளில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 4- ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பல்வேறு கடு மையான நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

குறிப்பாக அரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலை யங்களை அடைப்பதற்கான தேதியை அறிவிப்போம். அரியானா-ராஜஸ் தான் மாநில எல்லையான ஷாஜ கான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டில்லிக்கு வருவார்கள். வேளாண் சட்டங் களுக்கு எதிராக மிகப்பெரிய அள வில் டிராக்டர் பேரணி நடத்துவோம்.'' 

இவ்வாறு விவசாய அமைப்பு களின் பிரதிநிதிகள் கூறினர்.

கடந்த சில நாள்களாக தலை நகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று  (1.1.2021) 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவி யது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும்.

இந்த கடுமையான குளிரிலும் இரவு-பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். இதனால் தங்கள் உடல் நலத்துக்கு பெரும் சவால் ஏற்பட் டுள்ள போதும் அவற்றை எதிர் கொண்டு போராடி வரும் விவசா யிகள், தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே உறுதியாக உள்ளனர்.

இந்த போராட்டத்தையொட்டி டில்லியின் எல்லைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் நூற்றுக் கணக்கான காவல்துறையினரும்,  துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின் றனர்.

உணவுத்தேவை, கழிப்பறை வசதி கள் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் தாங்களே ஏற்படுத்திக் கொண்டு உறுதியான நெஞ்சுரத் தோடு போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பேச்சு வார்த்தைகளில் காட்டிய அலட்சி யத்தின் மூலம் மத்திய அரசின் உண்மை நோக்கம் வெளிப்பட்டு விட்டது. இதனை அடுத்து விவசாயிதானே என்று அலட்சியப் படுத்தும் மத்திய அரசுக்கு வரும் நாள்களில் எங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்துவதன் மூலம் அவர் களுக்கு உரிய  பாடம் புகட்டுவோம் என்று விவசாயிகள் சங்க மூத்த உறுப்பினர்கள் கூறினர்.

Comments