மத்திய அரசின் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
நிரந்தரத்
தீர்வு - முழுமையாக ரத்து செய்வதே!
மத்திய அரசு வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்!
மத்திய
அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், மூன்று சட்டங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதே முடிவான - முழுமையான தீர்வாக இருக்க முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள
அறிக்கை வருமாறு:
பி.ஜே.பி. தலைமையிலான
தேசிய ஜன நாயகக் கூட்டணி
அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும், விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகளுக்கும், அவர்களின் வாழ்வாதார தொழிலான விவ சாயத்துக்கும், அதன் விளைவாக நாட்டு மக்களுக்கும் பெரும் கேடு என்று ஆளும் தரப்பைத் தவிர, ஒட்டுமொத்தமான இந்தியாவே ஒரே குரலில் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனை
எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி., மாநில விவசாயிகள் 49 நாட்களாக, கடும் குளிரில் உயிரைப் பணயம் வைத்து அறப்போராட்டம் நடத்துகின்றனர்.
நீண்ட
இடைவெளிக்குப் பின் பேச்சு வார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றாலும்,
மத்திய அரசின் வறட்டுக் கவுரவத்தால், பிடி வாதத்தால் நியாயமான தீர்வு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்துகொண்டே வருகிறது.
தங்கள்
கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பம் குடும்பமாகப் போராடி வருகின்றனர் - 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அய்ந்தாறு பேர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
இவ்வளவுக்கும்
எந்தவித வன்முறைக்கும் இடமில்லாமல் 49 நாட்களாக பல்லாயிரக் கணக்கில் அறப்போராட்டம் நடத்துவது என்பது உலக வரலாற்றில் புதியதோர் சாதனையாகும்.
மத்திய
அரசு பிடிவாதமாக கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்காக, விவசாயிகளின் வயிற்றில் அடித்தே தீருவது என்ற முடிவால், பிரச்சினை உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், இன்று (12.1.2021) உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக் காலத் தடையை வழங்கியுள்ளது.
இது
ஒரு தற்காலிக வெற்றியே தவிர, நிரந்தரத் தீர்வாகக் கருத முடியாது என்றாலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. போராட் டத்தைக் கைவிட விவசாயிகள் தயாராக இல்லை.
குழு
அமைப்பது - பேச்சுவார்த்தை தொடர் வது என்ற முறையில் காலத்தை நீட்டிக்காமல், விவசாயிகள் எதிர்பார்க்கும் முடிவு ஏற் பட்டாகவேண்டும்.
உச்சநீதிமன்றத்
தீர்ப்பின் அடிப்படையில் விசாயிகளின் தலைவர்கள் அவர்களுக்கான சரியான முடிவை எடுப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்.
உச்சநீதிமன்றத்
தீர்ப்பு விவசாயப் பெருங்குடி மக்களுக்குக் கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வெற்றியாகும்.
உச்சநீதிமன்றமே
குழு அமைத்து இந்தப் பிரச்சினைமீது தீர்வு காணும் நடவடிக்கையை மேற்கொண்டாலும் (இது ஒரு வழிமுறைதான்) மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டே தீரவேண்டும் - இதில் மத்திய அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி இந்தப் பிரச்சினை ஏதோ பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களின் பிரச்சினை என்று மட்டும் சுருக்கிப் பார்க்காமல், அதன் வீச்சு இந்தியா முழுவதும் பரவவும், போராட்டம் வெடிக்கவும் அதிக வாய்ப்பு உண்டு என்பதைத் தொலை நோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம் - நல்லதையே எதிர்ப்பார்ப்போம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
12.1.2021