தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி, ஜன. 9- தத்துவ தலைவர் தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு நாளான 24.12.2020 அன்று காலை 9 மணி அளவில் இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாநில திரா விடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி புதுச்சேரி மண்டல கழக தலைவர் இரா.சடகோபன், இளைஞரணி தலைவர் தி.இராசா, புதுச்சேரி கழக மண்டல செயலாளர் கி.அறி வழகன் ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி மண்டல மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மகளிரணி விஜயா திராவிடச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி, சேத ராப்பட்டு சிவக்குமார், இளைஞ ரணி சே.கா.பாஷா, திராவிடன் புத்தக நிலையம் இரகுபதி திருச்சி அர்ச்சுனன், மு...நல்லய்யன், சி.இராஜகுமார் நகர கழக தலைவர் ஆறுமுகம், வில்லியனூர் உலக நாதன், சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலைக்கு மாநிலத் தலைவர் சிவ.வீர மணி தலைமையில் மண்டலத் தலைவர் இரா.சடகோபன், மண் டல அமைப்பாளர் இரா.இராசு, செயலாளர் கி.அறிவழகன், மகளி ரணித் தலைவர் எழிலரசி அறி வழகன், பொதுக்குழு உறுப்பினர் கள் லோ.பழனி, விலாசினி இராசு, இளைஞரணி தலைவர் திராவிட இராசா, கரு.சி.திராவிடச்செல்வம், மகளிரணி விஜயா திராவிடச்செல் வன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.

புதுச்சேரி கழக அமைப்பாளர் கே.குமார், அரியாங்குப்பம் கொம் யூன் கழகத்தலைவர் இரா.ஆதி நாராயணன், பெரியார் பெருந் தொண்டர் இருசாம்பாளையம் செ.இளங்கோவன், புதுச்சேரி . நகர அமைப்பாளர் மு.குப்புசாமி, புதுச்சேரி மண்டல பகுத்தறிவாளர் கழக தலைவர் கைலாச நெ.நட ராசன், வில்லியனூர் கழகத் தலை வர் கு.உலகநாதன், மண்டல கழக துணைத் தலைவர் வீர.இளங்கோ வன், சேதராப்பட்டு சிவக்குமார், உழவர்கரை கொம்யூன் கழக அமைப்பாளர் .சிவராசன், துணை அமைப்பாளர் கா.கா. முத்துவேல், .தமிழ்பிரியன், . பாலமுருகன், கதிர்காமம் தர்மலிங் கம், சே.கா.பாஷா, புரட்சி கவிஞ ரின் பேரன் கோ.செல்வம், கலை மாமணி வி.பி.மாணிக்கம், துரை.சிவாஜி, சேதராப்பட்டு சிவ.இராஜ்குமார், கவிஞர் பைரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு சார்பில்

புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்கள் அரசு சார்பில் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாண்புமிகு அமைச்சர் .கந்தசாமி, சட்டமன்ற உறுப் பினர் ஜான்குமார் மற்றும் காங் கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திமுக

புதுச்சேரி மாநில திமுக சார்பில் தெற்குப் பகுதி அமைப்பாளர் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா, வடக்கு பகுதி திமுக அமைப் பாளர் மேனாள் அமைச்சர் எஸ். பி.சிவக்குமார், மேனாள் சட்ட பேரவை உறுப்பினர் அளிபால் கென்னடி, மகளிரணி தேன்மொழி கலியபெருமாள் மற்றும் பெல்லாரி கிருஷ்ணமூர்த்தியும் திமுக நிர் வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன் தலைமையில் துணைத் தலைவர் கீதநாதன். நவீன் தன்ராஜ் மற்றும் தோழர்கள் புடைசூழ பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புதுச்சேரி மாநில தலைவர் இரா,இராஜாங்கம் தலைமையில் இரா.பெருமாள், கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மதிமுக

புதுச்சேரி மாநில மதிமுக பொறுப்புக் குழு தலைவர் கபிரியேல் தலைமையில் தொண்டர்க ளுடன் பகுத்தறிவு பகலவன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விசிக

புதுச்சேரி மாநில விசிக.வின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தனர். பொறுப்பாளர்கள் அமு தவன், முன்னவன், தமிழ்மாறன், அரசு ஊழியர் அய்க்கிய பேரவை தலைவர் மனீத் கோவிந்தராஜ் மற் றும் ஏராளமான தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மற்றும் பல்வேறு கட்சி கள், அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட் டது.

Comments