தந்தை பெரியார் 47ஆவது நினைவுநாள் கருத்தரங்கம்

வடகுத்து, ஜன. 10- வடக்குத்து இந்திரா நகர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் கருத்தரங்கம் மணி எலக்ட்ரானிக்ஸ் வளா கத்தில் 24.12.2020 மாலை 6 மணிக்கு மாவட்ட அமைப்பா ளர் சி.மணி வேல் தலைமையில் மண்டல செயலாளர் நா.தாமோதரன் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கன கராசு வரவேற்புரையாற்றினார்.

புலவர் ராவணன், தமிழ் மணி, இரா.தமிழன்பன், பிரதீ பன், இரா.மாணிக்கவேல் .பி.சி. வெங்கடேசன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர். மகளிரணி பத்மா, தமிழ்மணி விசயா, கலைச்செல்வி, திரா விடமணி, டிஜிட்டல் ராமநா தன், கண்ணன், குணசேகரன், திராவிடன், தர்மலிங்கம், திரு நாவுக்கரசு, ரத்தினசபாபதி ஆகியோர் பேசினர். கிளைக் கழகத் தலைவர் தங்க.பாஸ்கர் நன்றி கூறினார்.

Comments