டில்லியில் விவசாயிகளின் போராட்டம் 41ஆவது நாளை எட்டியது60 விவசாயிகள் உயிரிழப்பு

புதுடில்லி,ஜன.5- மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் இன்று 41ஆவது நாளை எட்டி உள்ளது. குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டுள்ளதால், வயதான விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. போராட்டக்களங்களில் விவசாயிகள் உயிரி ழப்பும் தொடர்கிறது. இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள் ளனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர் பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில், ‘டில்லி போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார், இதற்கு பதில் சொல்லவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புஎன்றார்.

Comments