38ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்...

பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு...

 புதுடில்லி, ஜன.3 தலைநகர் டில்லி எல்லையில் நடை பெற்று வரும் விவசாயிகள் போராட் டம் இன்று 38ஆவது நாளாக தொடரும்  நிலையில், போராட்டக் களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண் ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட் டங்களையும் திரும்பப்பெற வேண்டும என வலியுறுத்தி வடமாநில விவசாயிகள், டில்லி எல்லையில் போராட் டம் நடத்தி வருகின்றனர்.   கடுமையான குளிரிலும் இரவு-பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டம்   38ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,   4ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படா விட்டால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என விவ சாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், போராட் டத்தில் ஈடுபட்ட  வயது முதிர்ந்த விவசாயிகள் குளிரை தாங்க முடியாமல் கடும் அவ திப்படுவதுடன் பலர் பலியாகி வருகின்றனர்.டில்லி- உத்தர பிரதேச எல்லையில் நடை பெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்த விவசாயி கல்தான் சிங் (வயது 57)  என்பவர் உத்தர பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, போராட்டக் களத்தில் பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்த்துள்ளது.


Comments