தி.மு.க. ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது

பொங்கல் விழாவில் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் 

சென்னை, ஜன.13- பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான மு..ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு, விதவை ஓய்வூதிய திட்டம்,  பெண்களுக்கு திருமண உதவி என அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக மகளிர் சுய உதவிக் குழு செயல்படாமல் இருக்கிறது. பெண் களுக்கு வழங்கக்கூடிய சுழல் நிதி வங்கி களால் வழங்கப்படாமல் இருக்கிறது.

நீட் தேர்வுக்காக சட்டமன்றத்தில் 2 முறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பட்டது. ஆனால், இது வரை அந்த மசோதா என்ன ஆயிற்று என தமிழக முதல்வர் கேட்க ஆற்றல் இல்லாமல் உள்ளார். தொடர்ந்து திமுக நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்கும். தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் கூறியதை செய்து விட்டு உங்களிடம் வந்து சொல்லுவேன். தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக திட்டங்கள் அறிவித்து வருகிறது. எடப்பாடி 2ஜிபி டேட்டா கார்டு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மக்கள் அவருக்குடாட்டாகாட்ட தயாராகி விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments