“வேளாண் சட்டத்தால் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்” : விவசாயிகள் வேதனை!

 புதுடில்லி, ஜன.4 ஜனநாயக நெறி முறைகளை கையாளாமல் பெரும் பான்மை பலத்தை பயன்படுத்தி மூன்று புதிய வேளாண் சட் டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளி களுக்கு சாதகமாகவே உள்ளது என்று விவசாயம் தனியார் வசம் சென்றால் வரலாறு காணாத விலைவாசி உயரும் என்றும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரால் எதிர்க்கப்பட்டு வருகிறது.

டில்லியின் எல்லைகளில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங் களை எதிர்த்து 38ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் டில்லி, அரியானா மாநிலங்களில் சுங்கச் சாவடி, பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனிடையே அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு குறித்தும், தங்களது நிலைப்பாடு குறித்தும்   புதுடில்லியில் உள்ள வேளாண் துறை அமைச்சகம் அருகே உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் மன் றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனிடையே நேற்று மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார். 57 வயதான கல்தான் சிங் என்பவர் காஜிப்பூர் போராட்டக்களத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரி ழந்தார். விவசாயிகள் போராட் டத்தை மத்திய அரசு இலகுவாக எடுத்துக்கொள்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை இழக்க நேரிட்டால் ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். 15 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். அந்த நிலைமை வந்தால் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள் ளப்படுவார்கள் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித் துள்ளனர்.

Comments