கரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி: மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு

புதுடில்லி,ஜன.4 இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப் படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த இரு தடுப்பூசிகளும் 110 சதவீதம் பாதுகாப்பானவை என மருந்து கட் டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித் துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் மருந்து நிறுவனம் பரிசோதனை மற்றும் உற்பத்தி செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. இதேபோல் அய்தராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சிலும் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளன. இவ்விரு தடுப்பூசி களையும் அவசரகால பயன்பாட் டிற்கு பயன்படுத்தலாம் என மத்திய அரசின் நிபுணர் குழுவானது கடந்த வெள்ளியன்று  (1.1.2021) பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, 2 தடுப்பூசிகளையும் இந்தியாவில் கட் டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி கூறியதாவது:  கோவிஷீல்டு, கோவாக் சின் கரோனா தடுப்பூசிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிபு ணர்கள் குழு பரிந்துரைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு சிறிய அளவு இருந்தாலும், நாங்கள் அனுமதி அளித்திருக்க மாட்டோம். இந்த இரு தடுப்பு மருந்துகளும் 110 சதவீதம் பாதுகாப்பானவை. இந்த மருந்தை செலுத்தும் போது லேசான காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை லேசாக ஏற்படும். இந்த அறிகுறிகள் எந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்தி னாலும் வரக்கூடிய பொதுவான அறிகுறிகள்தான். ஆனால், இந்த மருந்தைச் செலுத்தினால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் எனக் கூறுவது தவறானது.

மருத்துவ பரிசோதனையின் போது திரட்டப்பட்ட பாதுகாப்பு மற்றும் நோய்எதிர்ப்புக் சக்தி குறித்த புள்ளிவிவரங்கள், வெளிநாடுகளில் பரிசோதனையின் போது பெறப் பட்ட புள்ளிவிவரங்களையும் இரு நிறுவனங்களும் அளித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த இரு தடுப்பு மருந்துகளும் 70 சதவீதம் வீரியத் தன்மையுடன் இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் தொடர்ந்து இறுதிக் கட்ட மருத்துவ பரிசோத னையில் ஈடுபடவும் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், கேடிலா மருந்து நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோத னைக்கும் மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. உலகம் முழு வதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இந்தியாவில் தனது கரோனா தடுப் பூசியின் அவசரகால பயன்பாட்டிற் கான அனுமதி கோரி விண்ணப்பித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கரோனா தடுப்பூசி களுக்கு இந்தியா அனுமதி அளித் துள்ளதை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி விரைவில் வெளிவரத் தயாராக இருப்பதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பொன்னவல்லா கூறி உள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியே பிரதான தடுப்பூசியாக பயன்படுத்தப் படும் என்றும், கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் பட்சமாக வைத்திருக் கப்படும் என்றும் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.

Comments