நோய் எதிர்ப்பு திறனை அளவிட ஆன்டி-சார்ஸ்-கோவி 2 அறிமுகம்

சென்னை, ஜன. 28- ரோச் (Roche) டயக்னஸ்டிக்ஸ் இந்தியா நிறுவனம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அளவிட எலெக்சிஸ் ஆன்டி-சார்ஸ்-கோவி 2அய்அறி முகப்படுத் தியுள்ளது. இச்சோதனை  இந்தியாவில் அய்.சி,எம்.ஆர். மற்றும் மத்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பின் ஒப் புதலைப் பெற்றுள்ளது.

இது ஒரு இன்விட்ரோ சோதனையாகும். இந்த சோதனை சுவாச குறைபாடு நோயை கண்டுபிடிக்க உதவு கிறது. இது மனித சீரம் மற் றும் பிளாஸ்மாவில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அள விட உதவுகிறது, மேலும் வைரசுக்கான உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக் கிறது.

தற்போதைய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உருவாக்கத்தில் உள்ள வைரஸ் புரதத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பு  விளைவைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதுகுறித்து இந்நிறுவன நிர்வாக இயக்குனர் நரேந்திர வர்தே கூறியிருப்பதாவது: "ரோச் டயக்னஸ்டிக்ஸ் நிறு வனம் தொற்று நோயைச் சமாளிக்க நாட்டிற்கு உத விடும் வகையில் நம்பகமான, உயர்தர சோதனை தீர்வுகளை வழங்க ரோச் உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments