பிப். 2 முதல் தொடர் மறியல் சிறை நிரப்பும் போராட்டம்

அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை,ஜன.22- மாவட்டத் தலைநகரங் களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் திட்டமிட்டபடி பிப்.2 முதல் நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிப்.2 முதல் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. ஆகவே, தமிழக அரசு சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாவிடில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் ஜன.31 அன்று திருச்சியில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திலும் பல்வேறு போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட உள் ளது. இவ்வாறு அவர் பேசினார். கோவை மாநாட் டில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் .செல்வமும், திருவண்ணாமலையில் நடை பெற்ற மாநாட்டில் பொருளாளர் மு.பாஸ்கரனும்  மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

Comments