சுயமரியாதை நாள்: டிச. 2 - தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடிய மாட்சி!

டிசம்பர் 2 சுயமரியாதை நாளாக தமிழகமெங்கும் கழகத் தோழர்களால் சிறப்பாகக் கொண்டாடப் படடது. அதன் விவரம் வருமாறு:

செந்துறை

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் அவர்கள் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங் கப்பட்டது நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் மணி வண்ணன், மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச் சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறி வன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், இளைஞரணி செய லாளர் திராவிட விஷ்ணு, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் தமிழரசன், திமுக ஒன்றிய செய லாளர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப் பினர் எழில்மாறன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக திராவிடர் கழக தோழர்களும் இளைஞர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு

ஈரோடு - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஒப்பற்ற தலைமை, வாழ்வியல் சிந்தனை 15ஆம் தொகுதி, ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் ஆகிய 3 புத்தகங்களை பேராசிரியர் .காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ்ணன், இரா.நற்குணன்,செ.பிரகாசன், கார்த்திக் ராம்கண், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தே. காமராஜ், பவானி அசோகன், மருத்துவர் மோகனசுந்தரராஜ், அசூரியா, ராஜேஸ்வரி, விஜயராணி பாலகிருஷ் ணன்,அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கல்லக்குறிச்சி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்‌ 88ஆவது பிறந்த நாளில் கல்லக்குறிச்சி மந்தை வெளித் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது.

மேட்டூர்

மேட்டூரில் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் திருச்சி கல்வி வளாகத்தில் உள்ள முதி யோர் இல்லத்திற்கு சென்று ஆசிரியர் அவர்களின் பிறந்த தினவிழாவையொட்டி அங்குள்ள முதிய வர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். அதற்கு முன்னர் நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று அங் குள்ள குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 2.12.2020 புதன் காலை 10 மணிக்கு, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 88 ஆவது பிறந்த நாள் விழாவும், நூல் அறிமுக விழாவும் நடைபெற்றது. மாவட்ட .. புரவலர் .ஆனந்தம் தலைமையில், மாவட்ட செய லாளர் விடுதலை தி.ஆதவன் கழகக் கொடியேற் றினார். நகர செயலாளர் பா.இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர தலைவர் சு.செல்வராசு அனைவரையும் வரவேற்றார். மாநில .. துணைத் தலைவர் கா.நல்லதம்பி தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய "ஒப்பற்ற தலைமை", வாழ்வியல் சிந்தனைகள் - 15", பேரா.அருணன் அவர் களது "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" ஆகிய நூல்களை அறிமுகம் செய்து வெளியிட்டார். விருதுநகர் சி.பிஅய் செயலாளர் கே.எஸ்.காதர்மைதீன், நா.நாராயணன் (சி.பி.எம்.), ஆயை. மு.காசாமைதீன், நகர .. செயலாளர் பூ.பத்மநாதன், மாணவர் கழக .பெரியார்செல்வன், இளைஞரணி .திருவள்ளுவர் மற்றும் தோழர்கள் நூல்களை பெற்றுக் கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் .தங்கசாமி, கவிஞர் நா.மா. முத்து, .சுப்பிரமணி மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி நன்றி கூற விழா நிறைவுற்றது.

புதுச்சேரி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்  88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சார்பாக, புத்தக வெளி யீட்டு விழா மற்றும் பிறந்த நாள், அடை மழையிலும் சிறப்பாக நடை பெற்றது.

இரா.கி.பேட்டை

தமிழர் தலைவர் பிறந்தநாளை யொட்டி இரா. கி.பேட்டை சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கோவை

கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் 88 ஆண்டு பிறந்தநாள் விழா  சிறப்பாக நடைபெற்றது.

மாநகர தலைவர்  புலியகுளம் .வீரமணி அவர் கள் தலைமையில் புலியகுளம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக மகளிரணி தோழர் சகாயமேரி மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்

கோவை மண்டல செயலாளர் .சிற்றரசு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்வில் மாநகர தோழர் மே ரங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி, தருமலிங்கம், அர்ச்சுனன், முருகானந்தம், சுரேசன் , மற்றும் இளமதி, தெய்வநாயகி, ரித்திகா, சிறப்பு அழைப்பாளர் திமுக கிளைச் செயலாளர் சி.சந் திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் சுப்பிரமணியம், இளங்கோவன், அனைத்து கிருஸ்துவ ஒருங்கி ணைப்பு அமைப்பின்  நிறுவனர் ஸ்டீபன், உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரிஷிவந்தியம்

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாளில் ரிஷிவந்தியம் ஒன்றியம் பாக்கம் புதூரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலையை ஒன்றியத் தலைவர் அர.சண் முகம் கடுவனூர் கிளைக் கழகத் தலைவர் கி.ஆனந்தன் ஆகிய இருவரும் அணிவித்து மரியாதை செய்தனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த நாள் விழா நூல் அறிமுக  விழா.

செய்யாறு

செய்யாறில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திமுகவைச் சார்ந்த திருமதி பார்வதி சீனிவாசன் புத்தகங்களை வெளியிட பொதுவுடமை இயக்கத்தை சார்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரி யர் திருவாளர் பழனி அவர்கள் பெற்றுக் கொண் டார். மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் நூல்களை பெற்றுக்கொண்டனர் நிகழ்விலே மாவட்ட தலைவர் இளங்கோவன், தலைமை ஏற்க மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங் கட்ராமன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத்தை சார்ந்த முனைவர் மூ.தமிழ் மொழி, என்.வி.கோவிந்தன், என்.கஜபதி சீனிவாசன், வெங்கடேசன், தங்கம் பெருமாள் மற் றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் விழா விலே கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று சென்றார்கள்.

செய்யாறில் நடைபெற்ற நூல் அறிமுக விழா வில் நூல் அறிமுக உரையாற்ற கழக சொற்பொழி வாளர் காஞ்சி கதிரவன்  நூல்களைப் பற்றி விளக்க உரையாற்றினார்.

ஒக்கநாடு மேலையூர்

2.12.2020. அன்று மாலை 4.30 மணி அளவில் ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகரில்,  எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியாரின் கருவூலம்,  தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

பெரியார் நகர் தங்க.துரைராஜ் அவர்கள் நிகழ்விற்கு தலைமை வகித்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் மரக்கன்று வழங்கும் விழாவை தொடங்கி வைத் தார். அனைவரையும் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் நளினி உத்திராபதி வரவேற்றார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் . அருணகிரி முன்னிலை ஏற்றார். 

ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமயன் குடிகாடு அன்பரசு,  ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பொன்னம்மாள் ராஜப்பன்,  தஞ்சை மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக் டர் அஞ்சுகம் பூபதி,  கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், இரா வெற்றி குமார், தஞ்சை மாவட்ட ..மு.. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா முத்தமிழ்,  தஞ்சை மாவட்ட ..மு.. மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் குலமங்கலம் கே.எம்.பாலாஜி,  ஒரத் தநாடு ..மு. ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் மருது ஜுவல்லரி மந்திரி குமார், ஒக்கநாடு மேலை யூர் கிளைச் செயலாளர் மா.ராஜரத்தினம்,  ஒக்க நாடு மேலையூர் ..மு.. ஊராட்சி செயலாளர் .ராஜகோபால், ஒக்கநாடு மேலையூர் சுகன்யா மெடிக்கல் சென்டர்  உரிமையாளர் மழவராயர் தெரு பொதுநலத் தொண்டர் .பிரபு, மழவராயர் தெரு தி.மு.கிளை செயலாளர் சுசி.நீதிவான், மழவராயர் தெரு ஊராட்சி மன்ற உறுப்பினர் .அன்பழகன், பெரியார் நகர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வெ.ஜெகதீசன், மழவராயர் தெரு தி.. கிளை செயலாளர் சு.சி இளையராஜா, பெரியார் நகர் கிளையைச் சார்ந்த மா.நடராஜன், செ.மாணிக்கராஜ்,  ஜெயராமன் மா.ரங்கசாமி, .மணிகண்டன், கோ.சிவசங்கர் ரா.இராமலிங்கம் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் பெரி யோர்கள் நண்பர்கள் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மரக்கன்று வாங்கி மகிழ்ந்தனர். பெரியார் நகர் மறைந்த .செல்லப்பன்,  நினைவாக தஞ்சை செ.ராஜாங்கம், பழ மரக்கன்றுகளை மகிழ்வுடன் வாங்கி சிறப்பித்தார். பெரியார் நகர் .உத்திராபதி  நிகழ்த்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கழகக் கொள் கைகள் முழங்க பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட செயலா ளர்முனியசாமி, மாவட்ட துணை செயலாளர் இரா.ஆழ்வார், நெல்லை மண்டலத் தலைவர். மா.பால் ராசேந்திரம், பெ.ரியார் மய்ய பொறுப் பாளர் சு.காசி, காப்பாளர் போசு,  மேனாள் மாவட்ட செயலாளர் .சக்தி வேல், வழக்குரைஞர் செல்வம், நகரச்செயலாளர் சி.மணி மொழியன், செல்லத்துரை, கோ.முருகன், கோபால்சாமி  ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்ட செய லாளர் மு.முனிய சாமி அனைவருக்கும் இனிப்பு வழங்கி தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாள்  விழாவை 13.12.20 அன்று  குடும்ப விழாவாக பெரியார் மய்யத்தில் கொண்டாடப்பட்டது, பேச் சுப் போட்டி கலை நிகழ்ச்சிநடத்தி பரிசுப் பொரு ளும் வழங்கப்பட்டது.

மும்பை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை கழகத்தின் சார்பில் தாராவி கலைஞர் மாளிகையில் 02/22/2020 மாலை 7:30 மணிக்கு தொடங்கியது. விழாவுக்கு வந்திருந்த அனைவரை யும் மும்பை தலைவர் .அந்தோணி வரவேற்றார் பெ.கணேசன் தலைமை வகித்தார். திமுகவின் மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் என்.வி. சண்முகராஜன் முன்னிலை வகித்தார். விழா தலைவர் ஆசிரியர் அவர்களின் முக்கால் நூற்றாண்டு பொதுவாழ்வு பணிகளை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச்செயலாளர் ஞான.அய்யாப் பிள்ளை, மனிதநேய இயக்கத்தை சார்ந்த சங்கர் திராவிடர், மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்  .ரவிச்சந்திரன், கழகத் தோழர்கள் பெரியார் பாலாஜி, அய். செல்வராஜ், மும்பை கழகப் பொருளாளர்  .கண்ணன் திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதாகிருஷ்ணன்,மும்பை திமுக அவைத்தலைவர் வே..உத்தமன் உள்ளிட் டோர் தமிழர் தலைவரின் பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்து பேசினர். இறுதியாக மும்பை துணைச் செயலாளர் ஜே.வில்சன் நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்பு தேநீர் வழங்கப்பட்டது.

குறிப்பு: தலைமை நிலையத்தில் இருந்து தமிழர் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகள் மும்பை மாநகரம் முழுக்க ஒட்டப்பட்டன!

தஞ்சை பேருந்து நிலையம்

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. உடன் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயகுமார் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வெற்றி குமார் மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர பாண்டியன் தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன், தஞ்சை மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு ராமலிங்கம், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் அரங்கராஜன், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் இளவரசன், தஞ்சை மாநகர மாணவர் கழக அமைப்பாளர் மானவீரன், ஒக்கநாடு மேலையூர் திராவிடச் செல்வம் மாணவர் கழக தோழர்கள் யாழினி, யாழிசை, தஞ்சை பெரியார் கணினி மய்ய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர்.

தஞ்சை மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வம் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் 88 ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக பொதுமக்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.

தருமபுரி

தருமபுரியில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88வது பிறந்த நாளையொட்டி புத்தகத்தை கழகத்தின் காப்பாளர் கேஆர் சின்ன ராஜ் வெளியிட்டார். அதை தருமபுரி தி.மு.. மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பின ருமான தடங்கம் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாநில அமைப் புச் செயலாளர்  ஊமை.ஜெயராமன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

செம்பொன்னார்கோயில்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் செம் பொன்னார்கோயிலில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. மாவட்ட கழக துணை செயலர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகிக்க, நகர பக தலை வர் அன்பழகன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் ஒன்றிய செயலர் கனக லிங்கம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கபிலன், கட்டட தொழிலாளர் சங்கத் தலைவர் குரு, திமுக இளைஞரணி அருள் செம்பை ஊராட்சி மன்றத்தலைவர் விசுவநாதன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்சியில் பெரியார் கல்வி வளாகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் நூற்றாண்டு கல்லூரி வளாகத்தில் ஓட்டுநர்களின் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓட்டுநர் தமிழ்செல் வன். பிரபு. பிரபாகர், அருள்மணி, அருண்குமார், பாண்டியன், ராஜ்குமார், பொறியாளர் ஜெயபிர காஷ் நாராயணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் பெரியார் சிலைக்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் மண்டலத் தலைவர் நாகராஜன், தொழிலாளர் பேரவை தலை வர் மோகன்,  மாவட்ட செயலாளர் கிருட்டின மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் ஆனந்த முனிராசன், மாவட்ட அவைத்தலைவர் பழ.இராசேந்திரன், மாவட்ட இணை செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, நகர தலைவர் மாணிக்கம், சின்னப்பன், .. செயலாளர், செல்வம், சிதம்பரம், இராமசாமி மற்றும் கழகத்தில் புதிதாக இணைத்துக்கொண்டவரான தமிழரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அறந்தாங்கி  சிபா பள்ளியின் நிறுவனர் ராமையா ஆசிரியர் நூலினை வெளியிட்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச் சியில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தார்

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

சிறுமங்கலம் கிராமம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு பெண்ணாடம் அருகில் சிறுமங்கலம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளுடன் 88 மரக் கன்றுகள் கொடுத்து பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

Comments