சேலம்,ஜன.21- மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் 28 கோடி வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த
வாடிக்கையாளர்களுக்கு
முறையாக சமையல் எரிவாயு உருளையை மேற்கொள்ள சமீபத்தில் ஓடிபி எண் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், புதிய திட்டமாக ஒரு எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் வகையில் 'தட்கல் புக்கிங்' முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த 'தட்கல் புக்கிங்' சிலிண்டர் விநியோகம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
முதலில்,
குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் 'தட்கல் புக்கிங்' முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அமல்படுத்துகிறது. அதன் வெற்றியை பார்த்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். தட்கல் முறையில் 'காஸ் சிலிண்டர் புக்கிங்' செய்த 30 முதல் 40 நிமிடத்திற்குள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்திட வேண்டும். இந்த விரைவு விநியோகத்திற்காக சேவை கட்டண மாக ரூ25
கூடுதலாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தட்கல் சிலிண்டர் புக்கிங்" முறை ஒன்றும் புதிதல்ல.
காலை
7 மணி முதல் இரவு 9 மணிக்குள் சிலிண்டரை பெற, சிறப்பு 'புக்கிங்கை' மேற்கொண்டு ரூ20 முதல் ரூ50 வரை அதிக கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டனர். தற்போது அமலுக்கு வரும் 'தட்கல் புக்கிங்' திட்டம், ஒரு சிலிண்டர் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றனர்.
பூடான்,
மாலத்தீவுக்கு இலவச கரோனா தடுப்பு மருந்து
புதுடில்லி,ஜன.21- இந்தியாவினால் அனுப்பிவைக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து பூடான்
மற்றும் மாலத்தீவு நாடுகளை சென்றடைந்தது.
இந்தியாவில்
சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் மற்றும்
அய்தராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்துகள், பூடான்,
மாலத்தீவு, மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.